Thursday, October 1, 2009

மதமாற்றமா, மன மாற்றமா..?




"சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்"

-என்ற தலைப்பின் கீழ் "தமிழ் ஹிந்து" எனும் தளத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் விவாதம் நடைபெறுகிறது; சுமார் 428 பின்னூட்டங்களுக்குப் பிறகும் முடிவில்லாமல் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது; நான் உட்பட மூன்று பேர் மட்டுமே பின்னூட்டம் இட்டு வந்தோம்;


ஆனால் வரைமுறையில்லாத தாக்குதல்களும் விமர்சனங்களும் ஆக விவாதம் போய்க் கொண்டிருக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை; எங்களுடைய முக்கியமான பல பின்னூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன‌; மற்றும் நீக்கப்பட்டன; ஆனால் அபாண்டமாக பழிபோடும் பிரச்சாரம் மட்டும் தொடருகிறது; இவர்களை யாரும் மதித்து பதில் கூற வருகிறதில்லை; ஆனாலும் என்னைப் போன்ற ஒரு சிலருடைய கருத்துக்களைப் புறக்கணிப்பதிலிருந்தே இவர்கள் எந்த அளவுக்கு நடுநிலையானவர்கள் என்பது விளங்குகிறது;

என்னால் இயன்றதொரு ஒரு சிறு முயற்சியாக அங்கே பதித்த மற்றும் ப(ம)திக்காமல் புறக்கணித்த கருத்துக்களை இங்கே தொகுக்க முயற்சிக்கிறேன்; மேலும் பிராமணர்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் என்ற சமூகப் பார்வையிலானதொரு கட்டுரையினையும் விரைவில் படைக்க இருக்கிறேன்; வாசகர்களும் தங்கள் பங்களிப்பைத் தர அன்புடன் அழைக்கிறேன். இறையாசி உங்களோடு..!  


On Tamil Hindu “Sadhu chellappa’s CBSS” Reply to=> "சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்" (Not Posted) மலர்மன்னன் அவர்கள், // ஹிந்து சமூகம் (society) வேறு; ஹிந்து மதம் (religion) வேறு என்று சொல்வது எந்த அடிப்படையில்..?(society only-not by religion) //  


ஹிந்து மதத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளை திணித்தது யார்..? 
வர்ணா (சிரம..?) கொள்கையினைத் தோற்றுவித்தவர் யார்..? 
தலித் சமூகத்தைச் சார்ந்தவன் ஹிந்து மதத்தில் எப்போது சேர்ந்தான்..? அவன் மதம் மாறியதும் அவன் சாதி அந்தஸ்து எப்படி உயர்கிறது..?
எல்லாமே அரசியலமைப்பு சட்ட சூழ்ச்சிகள்..!  


ஹிந்துவாக தாழ்த்தப்பட்ட நிலையிலிருப்பவனுக்கு உயர் அந்தஸ்து மதம் மாறுவதால் கிடைத்துவிடுகிறதே என்று யாரோ துடிப்பது போலவும் அந்த தாழ்த்தப்பட்டவன் முழுமையாக மதம் மாறாமலே ஒரே நேரத்தில் சமுக விடுதலையும் ஆன்ம விடுதலையும் பெற்றுவிடுகிறானே என்ற ஆற்றாமையும் யாரிடமோ பொங்குவது போலிருக்கிறதே..! 


அதைவிட இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாமே; 
அதற்கு யாரும் போராடமாட்டார்கள்; காரணம், அது பெருங்கூட்டம்;
நரித்தனமான சூழ்ச்சியினால் அதை வீழ்த்தி அதைக் காலாகாலத்துக்கும் தன்
காலடியில் வைத்திருப்பதே அந்தரங்க திட்டம்..!  


“கிறிஸ்தவ பிராமண சேவா சங்கம்” என்பது சாதி சங்கமல்ல; அவர்கள் பிராமண சமுதாயத்தின் கொடூர முகத்தைக் கண்டு மனம் வெதும்பிப் புறப்பட்ட பாரதியின் வழிவந்தவர்கள்..!  


ஏன் “சோ” எழுதிய “எங்கே பிராமணன்” தொடரைப் படிக்கவில்லையா..? மேல்நாட்டு பணத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாகப் பங்கிட்டுக் கொள்வது “பிரா”மணர்களே..! ஆம்,”ஆடு பகை குட்டி உறவு” என்பது போல நயந்து உறவாடி மொழியைக் கற்று அங்கும் ஆட்சி செய்வது “இவா”தானே..? “தமிழை”க் கொன்று தமிழ் கலாச்சாரத்தைக் கொன்று மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு 100 கோடி இந்தியர்களை அடிமைகளாக்கியது இந்து பிராமண வியாபாரிகளே..! மொழியிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் வரை இறக்குமதி செய்து இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் இந்து பிராமண வியாபாரிகள் இந்தியாவின் கடைக்கோடியிலிருக்கும் வேளைக்கு உணவில்லாத ஏழைக்கு என்ன தரமுடியும்..?  


“பூஜ்ய ஸ்ரீ” என்பதன் சொற்பொருள் யோசிக்காமல் சிறுபிள்ளைத் தனமாக புலம்புகிறீர்கள்; “ஸ்ரீ” என்பது ஆங்கிலத்தில் “மிஸ்டர்” என்றும் தமிழில் “திருமிகு” என்றும் வழங்கப்படும் சொல்லுக்கு இணையான சொல்லாகும்; “பூஜ்ய” எனும் சொல்லுக்கு விளக்கம் தேவையில்லை; அது வெறுமையைக் குறிக்கும் சொல்லாகும்; எனவே குறிப்பிட்ட நபர் தன் சுய நலத்தைனை விட்டு தன்னை வெறுமையாக்கி அல்லது கடவுளைச் சரணடைந்தவர் என்று கொள்ளலாம்; மேலும் “பூஜ்ய ஸ்ரீ” எனும் சொல் ஒரு மதத்துக்குச் சொந்தமானது அல்ல; அது சமஸ்கிருத மொழி வார்த்தை; தமிழிலும் மற்ற மொழிகளிலும் எத்தனையோ மாற்று மொழி வார்த்தைகள் கலந்திருக்கிறது; 


பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (மதம் மாற்ற..?) பயன்படுத்தும் மொழி என்பதால் ஆங்கிலத்தை யாரும் பயன்படுத்துவதில்லையா..?  
இதற்கு தான், “ஆடு பகை குட்டி உறவா..?” என்பார்கள்; 


தேவைப்பட்டால் இன்னும் தொடரும்..!










Free Web Counters


HTML Hit Counters