Saturday, December 26, 2009

‘நிஜம்’ – சன் டிவியின் தர்ம யுத்தம்..!

இந்து சமயத்தின் அருமை பெருமைகளைக் கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது,"தமிழ் ஹிந்து" இதுபோன்ற செயல்பாட்டுக்கு ஒவ்வொரு மத நம்பிக்கையாளருக்கும் முழு உரிமை உண்டு;


ஆனாலும் மாற்றுமத நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது உள்நோக்கத்துடன் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் போது அது மதப் பதட்டத்துக்கே வழிவகுக்கும்;

எந்த கட்டுரை எழுதினாலும் அதில் "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதவதைப் போல" கிறிஸ்தவத்தை சம்பந்தப்படுத்துவதை "தமிழ் ஹிந்து" வழக்கமாகக் கொண்டுள்ளது; இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கும் விளக்கத்தையும் பதிக்காமல் புறக்கணிக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் ஏற்கனவே இவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்துப்போகும் கொள்கையையே கடைபிடிக்கிறார்கள்;

இதுபோல ஒரு சிலர் கூறும் விளக்கத்தையும் புறக்கணிக்கும் போது சமுதாயத்தில் பதட்டம் உண்டாகவே இவை காரணமாகும்; தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள பிரபலமானவற்றை விமர்சிப்ப்து வழக்கமானதொரு தந்திரம்தான்; ஆனாலும் "தமிழ் ஹிந்து"வின் நிலைமை பரிதாபம்; நியாயமான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் சப்பைக் கட்டுகட்டி ஒரு முழு நீள நகைச்சுவை கட்டுரையினை வரைந்திருக்கிறார்கள்,அதன் குழுவினர்;


"நிஜம்– சன் டிவியின் உண்மையான முகம்" என்ற கட்டுரையில்தான் இந்த சங்கடத்தைக் காண நேர்ந்தது; இது புலி வால் பிடித்த நாயர் கதையாகப் போகிறது; ஏனெனில் சன் டிவியில் அந்த தொடரைப் பார்த்தவர்கள் நேரடியாக அனைத்தையும் பார்த்து உணர்ந்துவிட்டார்கள்; இதற்கு மேல் விளக்கம் ஒன்றும் தேவையில்லை;

இதுவரை மறைக்கப்பட்டிருந்த வடதேச இரகசியங்கள் இன்றைக்கு சன் டிவியின் மூலம் மக்கள் அரங்கத்துக்கு வந்துள்ளது; சன் டிவிக்கும் வேறு வழியில்லை; எவ்வளவு நாளைக்குத் தான் மக்கள் சினிமாவையும் சீரியலையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; ஊடகங்களின் அடுத்த தலைமுறை வளர்ச்சி இப்படித்தான் இருக்கவேண்டும்; அதைப் பொறுத்தவரையில் இது சரியானதே;


இன்னும் அறிவியல்,விஞ்ஞான,மருத்துவ,கல்வி ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வரத்தான் போகிறது; அதன் ஆரம்பமே "நடந்தது என்ன","நம்பினால் நம்புங்கள்","நிஜம்" போன்ற ரியாலிட்டி "ஷோ"க்கள்;இதன் விளைவு மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்ட நாகரீக சமுதாயம் மலருவதே..!


அதிலும் காசி நடந்துக் கொண்டிருக்கும் அருவருப்புகள் உச்சக்கட்ட கொடுமை;அதற்கு என்ன சொல்லி மறைவு கட்டமுடியும்;"கைப்புண்ணுக்கு" கண்ணாடியா என்பார்களே,அதைப் போன்றதே இந்த காரியமும்.

உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால் படகோட்டிகளை மதம் மாற்றி "அகோரிகள்" பிணம் தின்னுவதை கிறிஸ்தவர்கள் தடுக்கிறார்களாம்..!

சன் டிவி சுட்டிக் காட்டிய அநியாயங்களை மிக அழகாக "தமிழ் ஹிந்து" தொகுத்துத் தருகிறது; இது ஒன்றே போதுமே, உண்மை எது பொய் எது என்று உணர்ந்துகொள்ள‌..!



சன் டிவி முன் நிறுத்திய காசி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.

கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.

கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.

காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.

புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

// நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை.//



எது கட்டுக்கதை என்று உண்மையான பக்தர்கள் அறிவார்கள்.

// தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள்.//

இதுவும் கலாச்சாரம் சார்ந்த உரிமையா?

//அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள்.//

தங்கள் இடங்களுக்குச் சென்று...எப்படி வாழுவார்கள்..?

//ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல.//

ஏன் நிர்வாணமாக இருக்கவேண்டும்;இது காட்டுமிராண்டித் தனமல்லவா..?

//சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.//

ஓஹோ,பிணத்தைத் தின்பதை "லைவ்" ரிலே பண்ணவேண்டுமோ? பாவம், படித்த நம்ம ஊரு பசங்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போய் அந்த சாமியார்களுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்தோ பணம் கொடுத்தோ,கும்பிட்டோ தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள்;அவர்களிடம் போய் இதற்கு மேல் ஆதாரம் கேட்பது பாவமல்லவா?


வடதேசத்தில் சாயம் வெளுத்த "இந்துத்வா"அடிப்படைவாத குழுக்கள் தென் திசைக்குத் தங்கள் ஜாகையை மாற்றியுள்ளனர்;இங்கும் குஜராத் போல உத்திரபிரதேசத்தைப் போல ஒரு பதட்டத்தை உருவாக்கி குளிர்காய எண்ணுகின்றனர்;


தென்னகம் 2000 வருடங்களுக்கு முன்பே நல்லவர்கள் சிலர் வந்து கால்மிதித்த புண்ணிய பூமியாதலால் நல்ல கல்வியறிவும் கலாச்சாரமும் பெற்றுவிட்டது; இதற்கும் மேல் முன்னேறுவோமே தவிர பின்னுக்குச் செல்ல வாய்ப்பில்லை; எனவே இந்துத்வ குழுககளுக்கு பெரும் அவமானம் காத்திருக்கிறது என்பது நிச்சயம்..!


இங்கு இருக்கும் சில சலசலப்புகளுக்கும் காரணம்,கடவுள் மீதான மெய்யான பக்தியல்ல; கடவுள் பெயரால் நடக்கும் வசூல் சண்டையும் யார் பெரியவர்,யர்ர் புகழைப் பங்கு போட்டுக் கொள்வது என்ற போட்டிகளே..!

அவையும் சீக்கிரத்திலே துடைத்தெறியப்படும்;மதத்தின் மீதான மூடநம்பிக்கைகள் முழுவதும் வெளியாக்கப்பட்டு இந்தியத் துணை கண்டத்தில் ஒரு மாபெரும் திரு ஞான ஒளி பரவும்; அப்போது மக்களனைவரும் மெய்யான அந்த ஞான ஒளியினிடமாக ஈர்க்கப்படுவார்கள்; அப்போது இந்தியா உலகுக்கே வழி காட்டியாக அமைந்திருக்கும்; இதுவே எல்லாம் வல்ல இறைவனின் திருஉளச் சித்தமாகும்..!



Friday, December 25, 2009

‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்

‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்


இந்து மதம் என்கிற சனாதன தர்மம்..?

kumaragurupara


சாமியார்: 


நவுந்துராத நைனா... 
கவுந்துருவேன் நானு...  


சிங்கம்:

எல்லாமே ஒரு செட்டப் தானே சாமி... 
அதுக்காக நான் இரை தேடி ஒடும் போதும்,
நீ இதுபோல அசையாம குந்திக்கினு இருக்க முடியுமா என்ன..!


Monday, December 14, 2009

Answer to Tamilhindu

// மிசினரியார் நம்மை சந்திக்கும் போது அவர்களிடம் - சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, நாகரிக சமுதாயத்துக்கு எதிரானது - என்பதை நாம் விளக்க முடியும் // அன்பரே "மிஷினரி" எனும் சொல்லுக்கு இந்த நாகரீக உலகில் தேவையிருப்பதாகத் தெரியவில்லை; "மிஷினரி" என்ற சொல் வேற்று கலாச்சார மக்களிடையே தியாகத்துடனும் தன்னார்வத்துடனும் செயல்ப‌டுவோரைக் குறிக்கும் சொல்லாகும்; அந்த வகையில் பரந்துவிரிந்த இந்தியத் தாய்த் திருநாட்டில் சுயாதீன வழிபாட்டு உரிமையினைப் பெற போராடும் சுதேசிகளே அதிகம்; சடங்கு ஆச்சாரங்களால் அலுத்துப் போன சுதேசிகளே மாற்றத்தை விரும்பி அதைத் தேடுகையில் தடுக்கப்படுகிறார்கள்..!

Sunday, December 13, 2009

Thoughts: தத்துவ மலர்கள்

மாணவர்களுக்கு டிப்ஸ்:

இன்று காலை பிரார்ததனை நேரத்தில் (13.12.2009)வெளிப்பட்ட வார்த்தைகள்; "ஆண்டவரே,எங்கள் மாணவர்களுக்கு...
வெற்றியின் மீதான விருப்பத்தைத் தாரும்; 
வெற்றிக்கான ஆயத்தத்தைத் தாரும்; 
வெற்றியைக் குறித்த தரிசனத்தைத் தாரும்"


http://chillsam.wordpress.com/



Saturday, December 5, 2009

Who is Napkinnai..?


“கன்னியர் குலத்தின் மிக்கார் 
                                             கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் 

                                             முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை 

                                              முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு 

                                               என மனத்து எண்ணினானே.”
இது என்ன… அந்த கால ஆணாதிக்க சமுதாயத்தின் விரகதாபத்தை -அருவருப்பான வருணனைகளுடன் வெளிப்படுத்தும் ஒரு பிதற்றல்..!
இதற்கொரு ஆராய்ச்சி வேறா..?
ஒரு கன்னிப் பெண்ணைக் கருவாக வைத்துக் கொண்டு அவள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பத்தினியா, தங்கையா, மகளா என விவாதிக்க வெட்கமில்லை..?
வீட்டுல ஆயிரத்தெட்டு ஓட்டைய வச்சுண்டு வானத்து விண்மீன பாத்து வானத்துல ஓட்டைன்னானாம், ஒருத்தன்..!
நாகரீக சமுதாயத்துக்கு உதவாத இந்த காட்டுமிராண்டி மார்க்கத்துக்கு இனியும் சப்பைக் கட்டுகள் தேவையா..?

Monday, November 16, 2009

Comments on “வந்தேமாதரம்” Part.2




 இந்த தளத்தில் எனது கடைசி முயற்சியாக இருக்கட்டும்; ஏனெனில் தனிப்பட்ட முறையில் ஒரு பாவமும் அறியாத குடும்பப் பெண்களான எம் முன்னோர்களை சிலர் தாக்கும் போது மன வேதனையாக இருக்கிறது;


 Sarang :


//அப்போ நீர், அசோக் குமார் கோபாலன், அப்புறம் இங்கே வந்து வாரி இறைக்கும் ஏனையவர்கள் எல்லாரையும் டேரக்டா ஏசுவே வானத்துலேருந்து தூக்கி போட்டாரா - எலே அம்புட்டு பேறும் நேத்து வரைக்கும் மாரியாத்தாவ கும்பிட்ட பயலுவ இன்னிக்கு ஏதோ மேரி ஆத்தாவ கும்பிரானுவா...இன்கா இருக்கும் பலர் சுவிசெஷ கூட்டதால் சலவை செய்யபட்டு தானாகவே மதம் மாரியவர்கல் அல்லது போர்களின் போது படையினர் அரக்கத்தனமாக சாத்தானின் பிள்ளைகளாக மாறி எமது பெண்களை கற்பழிததன் விளைவால் வந்தவர்கள் தான் //


மாற்றுக் கருத்து இங்கே இருக்கக் கூடாது என்றால் முழுவதுமாக என்னை தடைசெய்து ஒரு மெயில் அனுப்பவும்; அல்லது முக்கியமானதை வெட்டிவிட்டு ஒரு சில கொம்பு சீவும் கருத்துக்களை மட்டும் வெளியிடும் போக்கு வேண்டாமே;
“வந்தேமாதரம்” பாடுவதைக் குறித்த எனது பொதுவான- சமூக அவலங்கள் சார்ந்த எனது பார்வையைத் தான் பதிவு செய்திருக்கிறேன்;
இதோ சொல்லுகிறேன்; “வந்தே மாதரம்” பாடியே எனது தேசபக்தியினை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது எனது கருத்து; ஏனெனில் அது ஒரு மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடல் என்று பெரியவர்களே அதனைத் தள்ளிவிட்டு மற்றொரு பொதுவான பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்து விட்டார்கள்;
“வந்தேமாதரம்” என்று சொல்லும் போது வரும் தேசிய உணர்வு “அல்லேலூயா” என்று சொன்னால் வராதா?
நான் நம்பும் ஏக இறைவன் பெண் தன்மைக்கும் ஆண் தன்மைக்கும் அப்பாற்பட்டவர்; விவரிக்க இயலாதவர்; எங்கும் நிறைந்தவ‌ர்;



bharat_mata_tshirtஏக தெய்வமான அவரையும் தொழுதுகொண்டு பெண் ரூபத்தில் சிங்கத்தின் மீது பவனி வரும் திலகமிட்ட ஒருத்தியை மாதாவாக்கி அவள் கையில் ஒன்று(படுத்தப்)பட்ட இந்தியாவின் தேசிய கொடியைக் கொடுத்து வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?


இது நான் கண்டு பேசிப் பழகிய தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மாவையே நான் வணங்காத போது கற்பனை உருவத்தை வணங்குவதாகக் கூறும் பாடலை எப்படி பாட முடியும்?
இந்தியாவை நான் நேசிக்கிறேன்; இந்தியாவின் முன்னேற்றத்துக்காக நானும் சிந்திக்கிறேன்; உழைக்கிறேன்; இது எனது தேசிய உணர்வு; அதற்கும் இந்த பாடலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை;


வள்ளுவன்:

// கிளாடி அவர்களே, பெரிய அறிவாளி என்று நினைப்பா உங்களுக்கு? //
நண்பர் கூறுவதுபோல ரொம்ப புத்திசாலித்தமாக எதையும் நான் எழுதிவிடவில்லை;
திரு.ரகுமான் முஸ்லிமாக “வந்தே மாதரம்” பாட‌வில்லை என்பதையே கூறினேன்; எனவே அவர் பாடிவிட்டார் என்பதற்காக அனைத்து இஸ்லாமியரும் பாடவேண்டும் என்ற அவசியமுமில்லை;
நாகூர் தர்காவில் நடப்பதெல்லாமே இஸ்லாத்துக்கு ஏற்புடையது என்பதும் குழந்தைத்தனமான கூற்றாகும்; தைரியமிருந்தால் அவர்களுடன் நெருங்கிப் பழகிப் பாருங்கள்;அவர்களிலும் பல பிரிவுகளுண்டு;
அவர்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை “தவ்ஹித் ஜமாத்”தார் பல சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்;அதில் நாகூரில் நடக்கும் கூத்துகளுக்கு எதிர்த்துப் போராடுவதும் ஒன்றாகும்;
indian-national-flagஇறுதியாக, கொடியேற்றி தேசிய நாளை நினைவுகூறும் நாடுகளிலெல்லாம் ஏதோ ஒரு பொம்பளையைப் புகழ்ந்து பாடியே விழாவை நடத்துகிறார்கள் என்று அர்த்தமல்ல; அவரவர் மார்க்க நெறிகளின் படி அந்த ஒருமைப்பாட்டு விழாவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்;
இந்தியாவோ அப்படியல்ல; இது பல்வேறு மொழியினக் கலாச்சாரங்களைக் கொண்ட நாடாதலால் இங்கே ஒரு குறிப்பிட்ட மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடலை தேசிய கீதமாக்க முயற்சிப்பது மீண்டும் கலகத்துக்கும் பிரிவினைக்குமே வழிகோலும்;


நியாயமாக பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் வீணான பாரம்பரிய சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துவிட்டு வாழ்வியல் கருத்துக்களை வலியுறுத்தும் நாகரிக மார்க்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முன்வரவேண்டும்; ஏற்கனவே முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்களை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கக் கூடாது;
இந்து மார்க்கமானது ஏழை எளிய மக்களின் வாழ்வியல் அச்சங்களைக் காசாக்கி சுரண்டி பிழைக்கும் மடாதிபதிகளின் கொள்ளை கூடாரம்; அது இனி மெல்ல அழிந்துதான் போகும்;அதேயே பாரதியும் தன் கனவாக இதே “வந்தேமாதரம்” பல்லவியை வைத்தே பாடுகிறான்; அது தெரியாமல் வெட்கமில்லாமல் உங்கள் தாறுமாறுகளுக்கு அவனையும் துணைக்கு அழைத்து மூக்கறுபடுகிறீர்கள்;
உங்களை சீர்திருத்த வந்த எல்லோருடைய முதுகின் மீதும் சவாரி செய்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள்; புத்தம்,ஜைனம்,சீக்கியம் போன்ற எந்த சீர்திருத்த மார்க்கத்திலும் பெண் தெய்வமில்லாத போது அவர்களும் உங்களோடு இருப்பதைப் போல மாயம் பண்ணுகிறீர்கள்;
இந்துத்வா வெறியர்கள் சிந்திக்கவேண்டும்; மனந்திரும்ப வேண்டும்..!

Friday, November 13, 2009

வந்தேமாதரம் ..!

B.R.ஹரன்
//
நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் 

செய்துள்ளார். //





திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;


சந்தியா ஜெயின்:
//
தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.//



சரி,இந்த கட்டுரையின் ஆசிரியர் அதனை வழிமொழிகிறாரா?
ரொம்ப சந்தோஷம்,பாரதத் தாயை நீங்களே கூறுபோட்டு விற்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே..!



அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
சற்று விவரம் கேட்கவேண்டும்..!



இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?


சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!


ஒரு திரைப்படத்தில் ஆச்சிமனோரமா என்று நினைக்கிறேன்வந்தே மாதரம் என்பதை வந்தேமாத்ரோம்அதாவது வந்து ஏமாத்துறோம் என்பார்கள்,பரியாசமாக; இன்றைக்கும் அதுதான் நடக்கிறது;


கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்கவே வெள்ளைக்காரன் வந்தானோ எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்ஒற்றை இலக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உண்மையான தியாகிகள்; சுதந்தரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளோ மனம் வெதும்பிய நிலையிலிருக்கின்றனர்; அவர்களுக்காக ஒரு துரும்பும் கிள்ளிப் போட மனமில்லாத நான் பாரத் மாதா கீ ஜேஎன முழங்கி ஆகப் போவதென்னவோ?


ரொம்ப ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால் எங்கே அந்நியன் வந்து ஆக்கிரமித்து விடுவானோ என பயந்து போய் கிடக்கிறேன்…!


சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் வந்தே மாதரம்பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?


சந்தியா வந்தனம்செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டேஎன்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!

Saturday, November 7, 2009

புண்பட்ட இந்து உணர்வு..?!

ஒரு டிவி டாக் ஷோ (Talk Show) இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம்;
அதற்கு எதிராக அவர்கள் சார்பாக சிலர் எழுப்பும் கேள்விகள்...

>முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?


>இஸ்லாமியச் சடங்கான ‘சுன்னத்’ தேவையா?


>மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?


>ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?


>கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?


>மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?


>தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?


>மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?


>உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?


>இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?


>மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?


இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.

// Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?
// இது ஒருத்தர்...


இதற்கு என்னுடைய பதில்...


இந்திய இந்து சமுதாயமானது பரந்துவிரிந்த இந்தியப் பெருங்கடலைப் போல மகா விஸ்தாரமானது; அதனைக் கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இந்த உலகில் இல்லை; இந்த மாபெரும் அமைப்புக்கு உயிர் கொடுத்து நடத்திச் செல்வதில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது; அவர்களாலேயே இந்து மார்க்கம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்;


கடைபிடிக்கப்படும் அத்தனை சடங்குகளையும் வடிவமைத்து கடைபிடிப்பதிலும் அவர்கள் பங்கே சிறப்பானது; அல்லது அவர்களுக்காகவே அனைத்து சடங்குகளும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; அப்படியானால் எதனைத் தொடரவேண்டும் எதனைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர்களே முடிவுசெய்கிறார்கள்; எனவே தான் பக்தி மார்க்கத்தில் சக்தியை பிரதானப்படுத்துகிறோம்;


ஆனால் இஸ்லாத்திலோ கிறிஸ்தவத்திலோ அப்படியல்ல;
அங்கே பெண்களுக்கு சுதந்தரம் பேச்சளவில் கூட கிடையாது; அவர்களாக முடிவெடுத்து எதையும் செய்யமுடியாது; இந்நிலையில் பெண்கள் எப்படி முன்வந்து புர்காவை கழட்டமுடியும்? அதற்கும் தர்காவிலிருந்து உத்தரவு வரவேண்டுமே;


அதே போல இங்கே “பாவாடை”(பெண்கள் அணிவது; பாவம் அறியாமையினால் “அங்கி”யை “பாவாடை” என்று ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டார்..!) என்று சொல்லப்பட்ட அங்கியும் கூட கிறிஸ்தவ அமைப்பினால் திணிக்கப்பட்டதுதான்; அதுவும் இப்போது மாறிவருகிறது;


தன்னை வேறுபடுத்திக் காட்டுவதும் தனித்தன்மையுடன் இருக்கவிரும்புவதும் ஒவ்வொரு உயிருக்குமுள்ள சிறப்பான குணமாகும்;


தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இருக்குமானால் அதனை அறியவும் இதுபோன்ற விவாதங்கள் உதவுமே; அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்ச்சி உண்டாகும்; சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ.


உதாரணத்துக்கு நமது தேசப் பிதாவான காந்திஜி வெள்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவரது ஆடையினிமித்தம் அவமானப்படுத்தப்பட்டாராம்; ஆனாலும் அவர் மனதளவில் அவமானப்பட்டதாகவோ மனம் புண்பட்டதாகவோ தெரியவில்லை;காரணம் அவருக்கு தன்மீது இருந்த திருப்தியுணர்வு;


அதே போல தாலி போன்ற சமுதாய சடங்குகளைக் குறித்த மரியாதை ஒருவருக்கு இருக்குமானால் ஏன் மனம் புண்படவேண்டும்? ஆனால் அதனைக் கட்டாயமாக சுமப்பதனால் அவமானப்பட்டு மனம் புண்பட வாய்ப்புண்டு;


தாலி,மெட்டி,பொட்டு என அனைத்திலும் பெண்களை வித்தியாசப்படுத்தும் சமுதாயம் ஆண்களுக்கு ஏன் ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை; அல்லது அவர்கள் ஏன் கடைபிடிக்கவில்லை; இதுவும் இந்து சமுதாயத்தின் சிறப்பானதொரு நடைமுறையாகும்; யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஒவ்வொருவருக்கும் சுயாதீனமும் சுதந்தரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; விரும்பினால் ஆச்சாரமாக இருக்கலாம் அல்லது “டாஸ்மாக்”கிலும் கிடக்கலாம்; அது இறைவன் “உறங்கும்” ஆன்மாவை ஒன்றும் செய்யாது; இது புரியாமல் காசுக்காக யாரோ எவரோ எதையோ செய்தால் நமக்கென்ன..? (…என்று மேல்நாட்டு அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை; நானே எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்..!)


என்னுடைய கருத்தின் ஆழமும் வேதனையும் யாருக்குப் புரியவேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாகவே புரியும் என்று நம்புகிறேன்.


hit counter

Thursday, October 1, 2009

மதமாற்றமா, மன மாற்றமா..?




"சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்"

-என்ற தலைப்பின் கீழ் "தமிழ் ஹிந்து" எனும் தளத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் விவாதம் நடைபெறுகிறது; சுமார் 428 பின்னூட்டங்களுக்குப் பிறகும் முடிவில்லாமல் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது; நான் உட்பட மூன்று பேர் மட்டுமே பின்னூட்டம் இட்டு வந்தோம்;


ஆனால் வரைமுறையில்லாத தாக்குதல்களும் விமர்சனங்களும் ஆக விவாதம் போய்க் கொண்டிருக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை; எங்களுடைய முக்கியமான பல பின்னூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன‌; மற்றும் நீக்கப்பட்டன; ஆனால் அபாண்டமாக பழிபோடும் பிரச்சாரம் மட்டும் தொடருகிறது; இவர்களை யாரும் மதித்து பதில் கூற வருகிறதில்லை; ஆனாலும் என்னைப் போன்ற ஒரு சிலருடைய கருத்துக்களைப் புறக்கணிப்பதிலிருந்தே இவர்கள் எந்த அளவுக்கு நடுநிலையானவர்கள் என்பது விளங்குகிறது;

என்னால் இயன்றதொரு ஒரு சிறு முயற்சியாக அங்கே பதித்த மற்றும் ப(ம)திக்காமல் புறக்கணித்த கருத்துக்களை இங்கே தொகுக்க முயற்சிக்கிறேன்; மேலும் பிராமணர்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் என்ற சமூகப் பார்வையிலானதொரு கட்டுரையினையும் விரைவில் படைக்க இருக்கிறேன்; வாசகர்களும் தங்கள் பங்களிப்பைத் தர அன்புடன் அழைக்கிறேன். இறையாசி உங்களோடு..!  


On Tamil Hindu “Sadhu chellappa’s CBSS” Reply to=> "சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்" (Not Posted) மலர்மன்னன் அவர்கள், // ஹிந்து சமூகம் (society) வேறு; ஹிந்து மதம் (religion) வேறு என்று சொல்வது எந்த அடிப்படையில்..?(society only-not by religion) //  


ஹிந்து மதத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளை திணித்தது யார்..? 
வர்ணா (சிரம..?) கொள்கையினைத் தோற்றுவித்தவர் யார்..? 
தலித் சமூகத்தைச் சார்ந்தவன் ஹிந்து மதத்தில் எப்போது சேர்ந்தான்..? அவன் மதம் மாறியதும் அவன் சாதி அந்தஸ்து எப்படி உயர்கிறது..?
எல்லாமே அரசியலமைப்பு சட்ட சூழ்ச்சிகள்..!  


ஹிந்துவாக தாழ்த்தப்பட்ட நிலையிலிருப்பவனுக்கு உயர் அந்தஸ்து மதம் மாறுவதால் கிடைத்துவிடுகிறதே என்று யாரோ துடிப்பது போலவும் அந்த தாழ்த்தப்பட்டவன் முழுமையாக மதம் மாறாமலே ஒரே நேரத்தில் சமுக விடுதலையும் ஆன்ம விடுதலையும் பெற்றுவிடுகிறானே என்ற ஆற்றாமையும் யாரிடமோ பொங்குவது போலிருக்கிறதே..! 


அதைவிட இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாமே; 
அதற்கு யாரும் போராடமாட்டார்கள்; காரணம், அது பெருங்கூட்டம்;
நரித்தனமான சூழ்ச்சியினால் அதை வீழ்த்தி அதைக் காலாகாலத்துக்கும் தன்
காலடியில் வைத்திருப்பதே அந்தரங்க திட்டம்..!  


“கிறிஸ்தவ பிராமண சேவா சங்கம்” என்பது சாதி சங்கமல்ல; அவர்கள் பிராமண சமுதாயத்தின் கொடூர முகத்தைக் கண்டு மனம் வெதும்பிப் புறப்பட்ட பாரதியின் வழிவந்தவர்கள்..!  


ஏன் “சோ” எழுதிய “எங்கே பிராமணன்” தொடரைப் படிக்கவில்லையா..? மேல்நாட்டு பணத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாகப் பங்கிட்டுக் கொள்வது “பிரா”மணர்களே..! ஆம்,”ஆடு பகை குட்டி உறவு” என்பது போல நயந்து உறவாடி மொழியைக் கற்று அங்கும் ஆட்சி செய்வது “இவா”தானே..? “தமிழை”க் கொன்று தமிழ் கலாச்சாரத்தைக் கொன்று மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு 100 கோடி இந்தியர்களை அடிமைகளாக்கியது இந்து பிராமண வியாபாரிகளே..! மொழியிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் வரை இறக்குமதி செய்து இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் இந்து பிராமண வியாபாரிகள் இந்தியாவின் கடைக்கோடியிலிருக்கும் வேளைக்கு உணவில்லாத ஏழைக்கு என்ன தரமுடியும்..?  


“பூஜ்ய ஸ்ரீ” என்பதன் சொற்பொருள் யோசிக்காமல் சிறுபிள்ளைத் தனமாக புலம்புகிறீர்கள்; “ஸ்ரீ” என்பது ஆங்கிலத்தில் “மிஸ்டர்” என்றும் தமிழில் “திருமிகு” என்றும் வழங்கப்படும் சொல்லுக்கு இணையான சொல்லாகும்; “பூஜ்ய” எனும் சொல்லுக்கு விளக்கம் தேவையில்லை; அது வெறுமையைக் குறிக்கும் சொல்லாகும்; எனவே குறிப்பிட்ட நபர் தன் சுய நலத்தைனை விட்டு தன்னை வெறுமையாக்கி அல்லது கடவுளைச் சரணடைந்தவர் என்று கொள்ளலாம்; மேலும் “பூஜ்ய ஸ்ரீ” எனும் சொல் ஒரு மதத்துக்குச் சொந்தமானது அல்ல; அது சமஸ்கிருத மொழி வார்த்தை; தமிழிலும் மற்ற மொழிகளிலும் எத்தனையோ மாற்று மொழி வார்த்தைகள் கலந்திருக்கிறது; 


பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (மதம் மாற்ற..?) பயன்படுத்தும் மொழி என்பதால் ஆங்கிலத்தை யாரும் பயன்படுத்துவதில்லையா..?  
இதற்கு தான், “ஆடு பகை குட்டி உறவா..?” என்பார்கள்; 


தேவைப்பட்டால் இன்னும் தொடரும்..!










Free Web Counters


HTML Hit Counters

Friday, September 25, 2009

Answers To tamilhindu



// "First of all, God cannot be realised by this kind of quarrels. My concern is Hindu society and the moment the Hindu society dwindles, there will be end to free thinking and individual preference. In every human activity, religion will poke its nose." // >MALARMANNAN  

அப்படியானால் மக்கள் சுதந்தரமாக சிந்திக்க ஏதுவாக அவரவர் தங்கள் தங்கள் மார்க்க கருத்துக்களை மற்றவர் மனம் புண்படாமல் பிரச்சாரம் செய்யட்டுமே; மதமாற்ற குற்றச்சாட்டுக்கும் ஒரு முடிவு வரட்டும்; கேள்விப்படாவிட்டால் எப்படி விசுவாசிப்பார்கள்..?  

டிவியில் எத்தனையோ விளம்பரங்கள் வருகிறது;  
எல்லா பொருளுமே வியாபாரம் ஆகிறது;  


ஆதி சங்கரர் முதலாக புனிதப பயணம் சென்று பிரச்சாரம் செய்தே மார்க்கத்தை வளர்த்தனர்; எனவே திரு.மலர்மன்னன் அவர்கள் கருத்தை நான் மனதார வரவேற்கிறேன்..! ஸ்ரீ ராம அ(பயம்)..?
===============================================================================


// People like Chellappa are richly compensated to harvest “souls” from Hindus. I put him very simple questions only. 1. What is his source of income. 2. How come he is able to frequently tour abroad. 3. Howcome anybody is born a sinner and sex is a sin. 4. If you say anybody a sinner by birth or even before being in the process of being born that is during intercourse by his/her would be father and mother, will it not amonut to create inferiority complex in the mind right from a tender age. 5. What is the fun in creating everybody a sinner and then redeeming everyone through Bible, which is creation of human beings. Has God nothing else that he should waste his time in such meanigless game? Why Chellappa, you can also answer these questions except the first two ones, as it is not difficult for anyone to understand by your answers. //  


ஆம், இந்துக்களல்ல அவர்களின் ஆன்மாவே விலையேறப்பெற்றது; 
அதை ஆதாயம் செய்ய எவ்வளவு கொடுத்தாலும் தகும்; 
ஏனெனில் அவர்களே மெய்யான பக்தியுள்ள ஜனம்;  
மற்ற கேள்விகளுக்கு பன்றி காய்ச்சலே (swine flu)உதாரணம்..!

Free Web Counters

இதுதான் இந்து மார்க்கமா..?



இதுதான் இந்து மார்க்கமா..?
இது நான் "தமிழ் ஹிந்து " தளத்தில் பெற்றுக்கொண்ட விளக்கம்....


அரவிந்தன் நீலகண்டன்
24 September 2009 at 6:54 pm


//இந்த கருத்தை இந்து மார்க்க ஞானத்துடன் தான் பதிக்கிறீர்களா?
வெளியே அனைத்தும் மாறலாம்;
உள்ளே எதுவும் மாறவில்லை;
அதுவே உயிரின் இரகசியம்;
சிருஷ்டி கர்த்தாவைப் பழித்து எந்த கிரகத்தில் சென்று குடியேறப்போகிறோம்;
உத்தரமண்டலத்தினை அந்தரத்தில் தொங்கவிட்டது யாரென்று எண்ணுகிறீர்கள்..?//
இது என்னுடைய கேள்வி;
அதற்கு நான் பெற்றுக்கொண்ட பதில் ஆச்சரியமானது...


சிருஷ்டி கர்த்தா என்று ஒருவன் இருந்தால்தானே அய்யா பழிப்பதற்கு … 
இந்த கருத்தை ஹிந்து மார்க்க ஞானத்துடன்தான் பதிக்கிறேனா என்கிறீர்கள்…
சாங்கியம் படைப்புக்கடவுளை மறுக்கிற தத்துவ அமைவு என்பதையும், 
யோகத்தில் ஈஸ்வரன் என்பது ஒரு principle தானே ஒழிய சிருஷ்டி கர்த்தர் இல்லை என்பதையும், சிருஷ்டி கர்த்தர் என்பது ஒரு தொடக்கநிலை  pedagogic கருவியாக மட்டுமே ஹிந்து ஞான மரபில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பிரக்ஞையே அனைத்துமாக காட்டப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு தெரியாதிருப்பதில் அதிசயமில்லை. 


சரி அதுதான் போகட்டும் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கும் 'நாஸதீய ஸூக்தம்' எனும் இந்த சிருஷ்டி கர்த்தர் என்கிற கருத்தாக்கத்தை எப்படி சிறுகுழந்தை தன் மரப்பாச்சி பொம்மையை வயதாகும் போது தூக்கிப் போட்டுவிட்டு செல்வது போல எளிதாகவும் அழகாகவும் கடந்து செல்கிறது என்று பாருங்கள். 


டார்வினின் பரிணாம அறிவியல் “நானே கர்த்தர் உன்னைப் படைத்தவன்” என மார் தட்டும் சிருஷ்டி தெய்வத்துக்கு தலையில் கொடுத்த குட்டு, உண்மையில் ஹிந்து தொன்மங்களில் முருகன் :”நானே சிருஷ்டி கர்த்தன்” என பிதற்றிய பிரம்மனுக்கு கொடுத்த குட்டின் எதிரொலி அல்லவா… 


பாவம் யஹீவாவும் அவரது ஒரே சீமந்த புத்திரனும் இன்னும் அந்த குட்டில் பொறி கலங்கி தள்ளாடுகிறார்கள்; நான் சொல்வதெல்லாம்…தள்ளாட்டத்தை எங்கள் மண்ணில் செய்யாதீர்கள்….மேற்கிலேயே வைத்துக்கொள்ளுங்கள்…
கர்த்தராம் படைத்தாராம்…
இரத்தத்தால் பாவத்தை துடைத்தாராம்…
அட போங்கப்பா போய் வேலையை பாருங்கள். 
பைபிளையும் மதவெறியையும் பரப்புவதைக் காட்டிலும் கிராமம் கிராமமாக போய் 
பசு மூத்திரத்தையும் 
பசுசாணத்தையும் 
பாலையும் 
மோரையும் விட்டு பஞ்ச கவ்யம் தயாரிக்க விவசாயிகளுக்கு சொல்லி கொடுங்க…விஷமில்லாத சோறையாவது சாப்பிடலாம்."


அப்படியானால் இந்து மார்க்கம் நாத்திகத்தை விட மோசமானதா..?
கடவுள் என்ற நற்பொருளை வைத்து மோசடி செய்கிறார்களா?
ஆனால் பைபிள் சொல்லுகிறது,
"ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,உம்முடைய வலது பாரிசத்தில் நித்தியப் பேரின்பமும் உண்டு. "
(சங்கீதம்.16:11 )

இது தான் நமக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தருகிறது..! 

















Free Web Counters

HTML Hit Counters


Wednesday, September 23, 2009

"தமிழ் ஹிந்து"- "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்"



"தமிழ் ஹிந்து" தளத்தில் நான் பதிக்கும் பின்னூட்டங்களில் சில பதிக்கப்படாவிட்டாலும் எனது முயற்சி வீணாகக் கூடாதே என யோசித்து இதனை வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்; இங்கே நியாயமான நேர்மையுடன் நட்புணர்வுடன் விவாதிப்போம்.


இது "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்" என்ற தொடுப்பு சம்பந்தமான பின்னூட்டமாகும்.


// நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் - ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன் //  


இதுதான் எனது வேண்டுகோளுக்கான பதிலா? ஏமாற்றம்..! நான் கேட்டது,புரியவில்லையா? ஆராய்ச்சி செய்பவரின் வயது,நோக்கம்,சூழ்நிலை இவையே நான் கோரியது;


பைபிள் அதனை நம்புப‌வருக்காகக் கொடுக்கப்பட்டது; யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல‌;  


உதாரணமாக எனது முப்பாட்டனார் எழுதியதாகச் சொல்லி ஒரு அருமையானதொரு வாழ்வியல் தத்துவக் கோட்பாட்டை அவருடைய முப்பாட்டனார் வரலாற்றுடன் கூடிய ஒரு படைப்பை எனது தகப்பனார் என்னிடம் கொடுத்தால் அதில் என்ன சூழ்ச்சியும் உள்நோக்கமும் இருக்கமுடியும்?  


அது நேர்மையுடன்- அன்புடன் குடும்ப சொத்தாக என்னிடம் வந்து சேர்ந்தது; அதனைப் பாதுகாத்து எனது கொள்ளுப் பேரன் கடைபிடிக்கச் செய்ய‌வேண்டியது என்னுடைய கடமையல்லவா?  


இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு "பொறம்போக்கு" வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கும் இதுவே எனது பதில்..!  


இதற்காகவே இறைவனும் இறைமகனுமான இயேசுகிறிஸ்து சொல்லிச் சென்றார், "மனிதன் உலக முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன இலாபம் என்ன?" என்று.  


நீங்கள் இதுகூட "கார்ல் மார்க்ஸ்" சொன்னதாக ஒரு அறிஞர் ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார் என்பீர்கள்; 


வரவர "ஜூனியர் விகடன்" கழுகார் போலிருக்கிறது உங்கள் கருத்துக்கள்..!  


நீங்கள் மாணவரல்ல,முந்திரிகொட்டை..! 
காரணம் மாணவர் இங்கே எழுதமாட்டார்; 
அவருக்கு ஆராய்ச்சிக்கும் படிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும் என்பது எனது யூகம்;  


ஜோதிடத்தை நம்பும் மனிதன் வேதத்தை நம்பக்கூடாதா? 
பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின் வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!





Free Web Counters


HTML Hit Counters