"மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பார்களே அது போல மேற்கண்ட படத்தைக் குறித்து பரபரப்பான செய்தி ஒன்றை "தினமலர்" நாளிதழ் வெளியிட, அதை "தமிழ் ஹிந்து" தளமும் வெளியிட்டிருக்கிறது;
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்:
மக்கள் அதிருப்தி
செப்டம்பர் 20,2009,00:00 IST
தேவாரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. முழுக்க விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் காய்கறிகளை மொத்த விற்பனை செய்ய 42 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து கேரளாவிற்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது.
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்:
மக்கள் அதிருப்தி
செப்டம்பர் 20,2009,00:00 IST
தேவாரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. முழுக்க விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் காய்கறிகளை மொத்த விற்பனை செய்ய 42 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து கேரளாவிற்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது.
நேற்று, கமிஷன் கடைகளிலிருந்து விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சிலவற்றில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டிருந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பத்து ரூபாய் நோட்டில் காந்தி படம் அச்சிடப் படும் வாட்டர் மார்க்கில் வெள்ளை நிறத்தில் வெற்றிடம் இருக்கும். இந்த பகுதியில் "நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்.ஏசா: 41:10 "என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளன.
ரூபாய் நோட்டில் உள்ள வாட்டர் மார்க் பகுதியை அளவெடுத்து அதற்கு தகுந்தாற் போன்ற சீல் தயார் செய்து ரூபாய் நோட்டில் புளுக்கலரில் அச்சிட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டில் எழுதுவதற்கே தடை உள்ள நிலையில் மதப்பிரசார வாசகங்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ரொம்ப பொறுப்பாக சில வாசகர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவிக்கிறார்கள்:
>Dear sir, This act is too bad. It should be investicated and the person''s must be punished.
by Fr.Augi ,India
Posted on செப்டம்பர் 20,2009,13:06 IST
>Goverment must findout the particular groups and give punishment ,heavy finedup thats good for our country.otherwise the stupid people cannot be change.
by D sara,India
Posted on செப்டம்பர் 20,2009,12:40 IST
இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகும்? புரியவில்லையே..!
அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..?
கரன்சியே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது; அதற்காக சிரமப்படும் ஏழை எளிய மக்கள் ஆறுதலடையவோ மன அமைதியடைவோ கூடாதா? எவ்வளவு கெட்ட எண்ணம் பார்த்தீர்களா?
'இந்துவா' எனும் மதவெறி இந்த அளவுக்கு ஏழை இந்தியாவைப் பாடாய்ப்படுத்துகிறது.
by Fr.Augi ,India
Posted on செப்டம்பர் 20,2009,13:06 IST
>Goverment must findout the particular groups and give punishment ,heavy finedup thats good for our country.otherwise the stupid people cannot be change.
by D sara,India
Posted on செப்டம்பர் 20,2009,12:40 IST
இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகும்? புரியவில்லையே..!
அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..?
கரன்சியே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது; அதற்காக சிரமப்படும் ஏழை எளிய மக்கள் ஆறுதலடையவோ மன அமைதியடைவோ கூடாதா? எவ்வளவு கெட்ட எண்ணம் பார்த்தீர்களா?
'இந்துவா' எனும் மதவெறி இந்த அளவுக்கு ஏழை இந்தியாவைப் பாடாய்ப்படுத்துகிறது.
HTML Hit Counters
6 comments:
http://www.youtube.com/watch?v=3gHS6FslaTk
தமிழ் ஹிந்துவுல சமாதானக் கொடி பறக்க விடுறாப்ல தெரியுது.. யாராச்சும் நொங்கெடுக்குறாய்ங்களோ????
நண்பர் கு.வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்;
சமாதானத்தை விரும்பியே உங்கள் தப்பெண்ணங்களைப் போக்க இடைவிடாமல் முயற்சிக்கிறோம்; எனது அனைத்துப் பதிவுகளையும் இணைத்துப் பாருங்கள்;(இதெல்லாம் வேண்டாத வேலை..?!) அங்கே ஒரே விதமான இணக்கமான போக்கே காணப்படும்;
மற்றபடி என்னை யாரும் பயமுறுத்த முடியாது;
இங்கே நாகரீகம் கருதியே எனது நண்பர்களின் தூஷணங்களைப் பதிக்கவில்லையே தவிர அனுதாபம் தேட எண்ணியிருந்தால் அதையும் செய்திருப்பேன்;
ஆனாலும் என்னையும் ஒரு பாவமும் அறியாத என் குருவையும் எனது தாயையும் எனது மனைவியையும் தூஷித்தவர்கள் நிச்சயம் மனம் வருந்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்;
அவர்களது மன மாற்றத்துக்காகவும் நான் பிரார்த்தனை செய்வேன்;
அன்புள்ள கிளாடி அவர்களுக்கு,
அச்சடிக்க பட்டுள்ள வாசகம் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது இது குழந்தைக்கு கூட தெரியும். மேலும் எசா.41.10 என்ற குறியீடுவேறு. இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகாது? புரியவில்லையே
அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..? என்று கேட்டிருக்கிறீர்கள்
பைபிளிலில் யேசுவை பற்றி ஏதும் கூறவில்லையா.
ஓ அந்த 10 ரூபாய் நோட்டு ஏழைகளிடம் அப்படி சொல்கிறதா. இதற்க்கும் இந்துத்வாவிற்க்கும் என்ன சம்மந்தம். ஏதாவது தெரிந்துதான் எழுதுகிறீர்களா. கிருத்தவமும் இப்படிதான் ஒரு நியாய் தர்மமற்ற மார்கம். செய்யும் தவறுகளை செய்துவிட்டு அதற்க்கு சப்பைகட்டு வேறு!
"அனானி"க்கு எனது வாழ்த்துக்கள்;
"பைபிள்" ஒரு மதத்துக்கு மட்டுமே சொந்தமானது என நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை; அதுதான் வித்தியாசம்;
இதுபோன்ற தைரியம் தரும் வாக்கியம் எந்த மதப் புத்தகத்திலும் இல்லை;
இது எப்படி அதிர்ச்சியடையச் செய்யும்?
"யாமிருக்க பயமேன் " என்று ஒரு "குரு" சொல்லிச் சென்றார்; அவரோ இந்த பூமியின் சுகதுக்கங்களில்- வருத்தங்களில் அடிபட்டு நம்மைப் போலவே பாடுபட்டு உயிர் துறந்தவர்;
ஆனால் "நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்" என்று யார் கூறமுடியும்?
மனுக் குலத்தை சிருஷ்டித்தவர் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் ஒரு ஜனத்தைப் பார்த்து இது போன்ற ஒரு தைரியம் தரும் ஊக்கப்படுத்தும் வார்த்தையினைச் சொல்லுகிறார்;
சொன்னவர் காலங்களைக் கடந்தவர் என்பதால் இன்றைக்கும் அது பொருத்தமாகவே இருக்கிறது; பொதுவானதாகவும் இருக்கிறது;
இது சட்டவிரோதமானது எனில் அதில் காதல் கவிதைகளையும் எண்ணிக்கைகளையும் எழுதுகிறார்களே அதுவும் சட்டவிரோதமானதுதானே..?
நாட்டில் எத்தனை மனித உரிமை மீறல்கள் நடந்துக் கொண்டிருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு மதத் துவேஷத்தைப் பரப்பும் நோக்கோடு "ஒரு குறிப்பிட்ட இனம்" சார்ந்த பத்திரிகை ஒன்று தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறதே, அதுதான் "இந்துத்வா" மாயை..!
=>மும்பை மண்ணின் மைந்தர்க்கே சொந்தம் எனப் போராடுபவர்களிடம் இந்த "இந்துத்வா" என்ன செய்தது?
=>வரதட்சணைக் கொடுமையினால் எண்ணற்ற முதிர் கன்னிகள் தவிக்கிறார்களே அதற்கு "இந்துத்வா" என்ன செய்தது?
=>தனியார் மருத்துவமனைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் அப்பாவி ஏழை எளிய மக்கள் சுரண்டப்படுகிறார்களே அங்கே "இந்துவா" என்ன செய்தது?
நீங்கள் அறிந்த "இந்துத்வா" வை நீங்களே விளக்கினால் நல்லது..!
இறுதியாக பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் பற்றி நானறிந்த ஒரு தகவல்: அவர் தனது லெட்டர் பேடில், "If God be for us who can be against us" என்று போட்டிருக்கிறார்; அது பைபிள் வசனமாகும்; இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
திரு gladdy அவர்களே
///"நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்.ஏசா: 41:10"
இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகும்? புரியவில்லையே..!
அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..? ///
இது கண்டிப்பாக கிறிஸ்துவ மத பிரச்சாரம் தான்.இது யேசுக்கான,கிருஸ்துவ மத பிரசாரம் இல்லை என்று உங்கள் பைபிள் சாட்சியாக சொல்ல முடியுமா?
///இது சட்டவிரோதமானது எனில் அதில் காதல் கவிதைகளையும் எண்ணிக்கைகளையும் எழுதுகிறார்களே அதுவும் சட்டவிரோதமானதுதானே..?///
கண்டிப்பாக சட்ட விரோதமே.காதல் கவிதைகளையும்,பெயர்களையும்,ஏன் இந்து கடவுள் பெயரோ,கீதையின் ஸ்லோகமோ எழுதியிருந்தாலும் அது சட்ட விரோதமே!குற்றமே!
///இதுபோன்ற தைரியம் தரும் வாக்கியம் எந்த மதப் புத்தகத்திலும் இல்லை;///
ஆஹா?!!! gladdy யாரே!!! நீங்கள் மீண்டும் மீண்டும் கிறிஸ்து மத பிரசாரமே செய்கிறீர்கள்.ஆனால் நான் அப்படி மத பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறுகிறீர்கள்.நீங்கள் உலகில் உள்ள அனைத்து மத நூல்களையும் ஒரு வரி விடாமல் படித்து முடித்துவிட்டது போலவே கூறுகிறீர்கள்.உங்கள் கடவுள் உன்னுடன் இருக்கிறார்.ஆனால் என் கடவுளோ என்னுள்ளேயே இருக்கிறார்.
////"பைபிள்" ஒரு மதத்துக்கு மட்டுமே சொந்தமானது என நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை; அதுதான் வித்தியாசம்;////
திரு gladdy அய்யா! ஒரு இந்து வேதத்தையும்,உபநிசட்தையும்,படித்துக்கொண்டு,இந்து தெய்வங்களையும் கும்பிட்டுக்கொண்டு,பைபிளையும் படித்துக்கொண்டு ,ஏசுவையும் கும்பிட்டால் அந்த இந்துக்கு ஏசுவின் சொர்க்கம் கிடைக்குமா??!!!அப்படி இருந்தால் மட்டுமே பைபிள் எல்லா மதத்திற்கும் சொந்தமானது என்று அர்த்தம்.
///இறுதியாக பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் பற்றி நானறிந்த ஒரு தகவல்: அவர் தனது லெட்டர் பேடில், "If God be for us who can be against us" என்று போட்டிருக்கிறார்;அது பைபிள் வசனமாகும்; இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்///
திரு gladdy அய்யா,
எந்த மதக் கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மற்ற மதக்காரர்களை விட இந்துவிற்கு அதிகம் உண்டு.அதனால் தனக்கு பிடித்த வாசகத்தை போட்டிருக்கிறார்.S.V.Sekar. தன்னுடைய Letter pad டில் தானே போட்டிருந்தார்.ரூபாய் தாளில் அச்சடிக்கவில்லையே?!! .அவர் ஒரு இந்து,பைபிள் வசனத்தை போட்டு,கிருஸ்தவ மத பிரசாரம் எதுவும் செய்யவில்லையே?!!!அவர் ஒன்னும் மத மாற்ற இப்படி செய்யவில்லையே?!!!இது ஒன்னும் சட்டத்திற்கு விரோதமானது இல்லையே?!!!
தனபால்.
Post a Comment