இந்த தளத்தில் எனது கடைசி முயற்சியாக இருக்கட்டும்; ஏனெனில் தனிப்பட்ட முறையில் ஒரு பாவமும் அறியாத குடும்பப் பெண்களான எம் முன்னோர்களை சிலர் தாக்கும் போது மன வேதனையாக இருக்கிறது;
Sarang :
//அப்போ நீர், அசோக் குமார் கோபாலன், அப்புறம் இங்கே வந்து வாரி இறைக்கும் ஏனையவர்கள் எல்லாரையும் டேரக்டா ஏசுவே வானத்துலேருந்து தூக்கி போட்டாரா - எலே அம்புட்டு பேறும் நேத்து வரைக்கும் மாரியாத்தாவ கும்பிட்ட பயலுவ இன்னிக்கு ஏதோ மேரி ஆத்தாவ கும்பிரானுவா...இன்கா இருக்கும் பலர் சுவிசெஷ கூட்டதால் சலவை செய்யபட்டு தானாகவே மதம் மாரியவர்கல் அல்லது போர்களின் போது படையினர் அரக்கத்தனமாக சாத்தானின் பிள்ளைகளாக மாறி எமது பெண்களை கற்பழிததன் விளைவால் வந்தவர்கள் தான் //
மாற்றுக் கருத்து இங்கே இருக்கக் கூடாது என்றால் முழுவதுமாக என்னை தடைசெய்து ஒரு மெயில் அனுப்பவும்; அல்லது முக்கியமானதை வெட்டிவிட்டு ஒரு சில கொம்பு சீவும் கருத்துக்களை மட்டும் வெளியிடும் போக்கு வேண்டாமே;
“வந்தேமாதரம்” பாடுவதைக் குறித்த எனது பொதுவான- சமூக அவலங்கள் சார்ந்த எனது பார்வையைத் தான் பதிவு செய்திருக்கிறேன்;
இதோ சொல்லுகிறேன்; “வந்தே மாதரம்” பாடியே எனது தேசபக்தியினை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது எனது கருத்து; ஏனெனில் அது ஒரு மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடல் என்று பெரியவர்களே அதனைத் தள்ளிவிட்டு மற்றொரு பொதுவான பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்து விட்டார்கள்;
“வந்தேமாதரம்” என்று சொல்லும் போது வரும் தேசிய உணர்வு “அல்லேலூயா” என்று சொன்னால் வராதா?
நான் நம்பும் ஏக இறைவன் பெண் தன்மைக்கும் ஆண் தன்மைக்கும் அப்பாற்பட்டவர்; விவரிக்க இயலாதவர்; எங்கும் நிறைந்தவர்;
ஏக தெய்வமான அவரையும் தொழுதுகொண்டு பெண் ரூபத்தில் சிங்கத்தின் மீது பவனி வரும் திலகமிட்ட ஒருத்தியை மாதாவாக்கி அவள் கையில் ஒன்று(படுத்தப்)பட்ட இந்தியாவின் தேசிய கொடியைக் கொடுத்து வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?
இது நான் கண்டு பேசிப் பழகிய தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மாவையே நான் வணங்காத போது கற்பனை உருவத்தை வணங்குவதாகக் கூறும் பாடலை எப்படி பாட முடியும்?
இந்தியாவை நான் நேசிக்கிறேன்; இந்தியாவின் முன்னேற்றத்துக்காக நானும் சிந்திக்கிறேன்; உழைக்கிறேன்; இது எனது தேசிய உணர்வு; அதற்கும் இந்த பாடலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை;
வள்ளுவன்:
// கிளாடி அவர்களே, பெரிய அறிவாளி என்று நினைப்பா உங்களுக்கு? //
// கிளாடி அவர்களே, பெரிய அறிவாளி என்று நினைப்பா உங்களுக்கு? //
நண்பர் கூறுவதுபோல ரொம்ப புத்திசாலித்தமாக எதையும் நான் எழுதிவிடவில்லை;
திரு.ரகுமான் முஸ்லிமாக “வந்தே மாதரம்” பாடவில்லை என்பதையே கூறினேன்; எனவே அவர் பாடிவிட்டார் என்பதற்காக அனைத்து இஸ்லாமியரும் பாடவேண்டும் என்ற அவசியமுமில்லை;
நாகூர் தர்காவில் நடப்பதெல்லாமே இஸ்லாத்துக்கு ஏற்புடையது என்பதும் குழந்தைத்தனமான கூற்றாகும்; தைரியமிருந்தால் அவர்களுடன் நெருங்கிப் பழகிப் பாருங்கள்;அவர்களிலும் பல பிரிவுகளுண்டு;
அவர்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை “தவ்ஹித் ஜமாத்”தார் பல சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்;அதில் நாகூரில் நடக்கும் கூத்துகளுக்கு எதிர்த்துப் போராடுவதும் ஒன்றாகும்;
இறுதியாக, கொடியேற்றி தேசிய நாளை நினைவுகூறும் நாடுகளிலெல்லாம் ஏதோ ஒரு பொம்பளையைப் புகழ்ந்து பாடியே விழாவை நடத்துகிறார்கள் என்று அர்த்தமல்ல; அவரவர் மார்க்க நெறிகளின் படி அந்த ஒருமைப்பாட்டு விழாவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்;
இந்தியாவோ அப்படியல்ல; இது பல்வேறு மொழியினக் கலாச்சாரங்களைக் கொண்ட நாடாதலால் இங்கே ஒரு குறிப்பிட்ட மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடலை தேசிய கீதமாக்க முயற்சிப்பது மீண்டும் கலகத்துக்கும் பிரிவினைக்குமே வழிகோலும்;
நியாயமாக பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் வீணான பாரம்பரிய சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துவிட்டு வாழ்வியல் கருத்துக்களை வலியுறுத்தும் நாகரிக மார்க்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முன்வரவேண்டும்; ஏற்கனவே முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்களை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கக் கூடாது;
இந்து மார்க்கமானது ஏழை எளிய மக்களின் வாழ்வியல் அச்சங்களைக் காசாக்கி சுரண்டி பிழைக்கும் மடாதிபதிகளின் கொள்ளை கூடாரம்; அது இனி மெல்ல அழிந்துதான் போகும்;அதேயே பாரதியும் தன் கனவாக இதே “வந்தேமாதரம்” பல்லவியை வைத்தே பாடுகிறான்; அது தெரியாமல் வெட்கமில்லாமல் உங்கள் தாறுமாறுகளுக்கு அவனையும் துணைக்கு அழைத்து மூக்கறுபடுகிறீர்கள்;
உங்களை சீர்திருத்த வந்த எல்லோருடைய முதுகின் மீதும் சவாரி செய்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள்; புத்தம்,ஜைனம்,சீக்கியம் போன்ற எந்த சீர்திருத்த மார்க்கத்திலும் பெண் தெய்வமில்லாத போது அவர்களும் உங்களோடு இருப்பதைப் போல மாயம் பண்ணுகிறீர்கள்;
இந்துத்வா வெறியர்கள் சிந்திக்கவேண்டும்; மனந்திரும்ப வேண்டும்..!
16 November 2009 at 2:01 am