Wednesday, September 23, 2009

"தமிழ் ஹிந்து"- "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்"



"தமிழ் ஹிந்து" தளத்தில் நான் பதிக்கும் பின்னூட்டங்களில் சில பதிக்கப்படாவிட்டாலும் எனது முயற்சி வீணாகக் கூடாதே என யோசித்து இதனை வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்; இங்கே நியாயமான நேர்மையுடன் நட்புணர்வுடன் விவாதிப்போம்.


இது "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்" என்ற தொடுப்பு சம்பந்தமான பின்னூட்டமாகும்.


// நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் - ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன் //  


இதுதான் எனது வேண்டுகோளுக்கான பதிலா? ஏமாற்றம்..! நான் கேட்டது,புரியவில்லையா? ஆராய்ச்சி செய்பவரின் வயது,நோக்கம்,சூழ்நிலை இவையே நான் கோரியது;


பைபிள் அதனை நம்புப‌வருக்காகக் கொடுக்கப்பட்டது; யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல‌;  


உதாரணமாக எனது முப்பாட்டனார் எழுதியதாகச் சொல்லி ஒரு அருமையானதொரு வாழ்வியல் தத்துவக் கோட்பாட்டை அவருடைய முப்பாட்டனார் வரலாற்றுடன் கூடிய ஒரு படைப்பை எனது தகப்பனார் என்னிடம் கொடுத்தால் அதில் என்ன சூழ்ச்சியும் உள்நோக்கமும் இருக்கமுடியும்?  


அது நேர்மையுடன்- அன்புடன் குடும்ப சொத்தாக என்னிடம் வந்து சேர்ந்தது; அதனைப் பாதுகாத்து எனது கொள்ளுப் பேரன் கடைபிடிக்கச் செய்ய‌வேண்டியது என்னுடைய கடமையல்லவா?  


இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு "பொறம்போக்கு" வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கும் இதுவே எனது பதில்..!  


இதற்காகவே இறைவனும் இறைமகனுமான இயேசுகிறிஸ்து சொல்லிச் சென்றார், "மனிதன் உலக முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன இலாபம் என்ன?" என்று.  


நீங்கள் இதுகூட "கார்ல் மார்க்ஸ்" சொன்னதாக ஒரு அறிஞர் ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார் என்பீர்கள்; 


வரவர "ஜூனியர் விகடன்" கழுகார் போலிருக்கிறது உங்கள் கருத்துக்கள்..!  


நீங்கள் மாணவரல்ல,முந்திரிகொட்டை..! 
காரணம் மாணவர் இங்கே எழுதமாட்டார்; 
அவருக்கு ஆராய்ச்சிக்கும் படிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும் என்பது எனது யூகம்;  


ஜோதிடத்தை நம்பும் மனிதன் வேதத்தை நம்பக்கூடாதா? 
பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின் வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!





Free Web Counters


HTML Hit Counters




2 comments:

christianbrahmin said...
This comment has been removed by the author.
dhanabal. said...

////////////இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு "பொறம்போக்கு" வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கும் இதுவே எனது பதில்..! /////////
இப்படித் தானே நீங்கள் இந்துமத இதிகாசத்திற்கு ஆதாரமில்லை என்று கூறி பலரை மதம் மாற்றினீர்கள்.

Post a Comment