Thursday, October 1, 2009

மதமாற்றமா, மன மாற்றமா..?




"சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்"

-என்ற தலைப்பின் கீழ் "தமிழ் ஹிந்து" எனும் தளத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் விவாதம் நடைபெறுகிறது; சுமார் 428 பின்னூட்டங்களுக்குப் பிறகும் முடிவில்லாமல் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது; நான் உட்பட மூன்று பேர் மட்டுமே பின்னூட்டம் இட்டு வந்தோம்;


ஆனால் வரைமுறையில்லாத தாக்குதல்களும் விமர்சனங்களும் ஆக விவாதம் போய்க் கொண்டிருக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை; எங்களுடைய முக்கியமான பல பின்னூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன‌; மற்றும் நீக்கப்பட்டன; ஆனால் அபாண்டமாக பழிபோடும் பிரச்சாரம் மட்டும் தொடருகிறது; இவர்களை யாரும் மதித்து பதில் கூற வருகிறதில்லை; ஆனாலும் என்னைப் போன்ற ஒரு சிலருடைய கருத்துக்களைப் புறக்கணிப்பதிலிருந்தே இவர்கள் எந்த அளவுக்கு நடுநிலையானவர்கள் என்பது விளங்குகிறது;

என்னால் இயன்றதொரு ஒரு சிறு முயற்சியாக அங்கே பதித்த மற்றும் ப(ம)திக்காமல் புறக்கணித்த கருத்துக்களை இங்கே தொகுக்க முயற்சிக்கிறேன்; மேலும் பிராமணர்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் என்ற சமூகப் பார்வையிலானதொரு கட்டுரையினையும் விரைவில் படைக்க இருக்கிறேன்; வாசகர்களும் தங்கள் பங்களிப்பைத் தர அன்புடன் அழைக்கிறேன். இறையாசி உங்களோடு..!  


On Tamil Hindu “Sadhu chellappa’s CBSS” Reply to=> "சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்" (Not Posted) மலர்மன்னன் அவர்கள், // ஹிந்து சமூகம் (society) வேறு; ஹிந்து மதம் (religion) வேறு என்று சொல்வது எந்த அடிப்படையில்..?(society only-not by religion) //  


ஹிந்து மதத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளை திணித்தது யார்..? 
வர்ணா (சிரம..?) கொள்கையினைத் தோற்றுவித்தவர் யார்..? 
தலித் சமூகத்தைச் சார்ந்தவன் ஹிந்து மதத்தில் எப்போது சேர்ந்தான்..? அவன் மதம் மாறியதும் அவன் சாதி அந்தஸ்து எப்படி உயர்கிறது..?
எல்லாமே அரசியலமைப்பு சட்ட சூழ்ச்சிகள்..!  


ஹிந்துவாக தாழ்த்தப்பட்ட நிலையிலிருப்பவனுக்கு உயர் அந்தஸ்து மதம் மாறுவதால் கிடைத்துவிடுகிறதே என்று யாரோ துடிப்பது போலவும் அந்த தாழ்த்தப்பட்டவன் முழுமையாக மதம் மாறாமலே ஒரே நேரத்தில் சமுக விடுதலையும் ஆன்ம விடுதலையும் பெற்றுவிடுகிறானே என்ற ஆற்றாமையும் யாரிடமோ பொங்குவது போலிருக்கிறதே..! 


அதைவிட இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாமே; 
அதற்கு யாரும் போராடமாட்டார்கள்; காரணம், அது பெருங்கூட்டம்;
நரித்தனமான சூழ்ச்சியினால் அதை வீழ்த்தி அதைக் காலாகாலத்துக்கும் தன்
காலடியில் வைத்திருப்பதே அந்தரங்க திட்டம்..!  


“கிறிஸ்தவ பிராமண சேவா சங்கம்” என்பது சாதி சங்கமல்ல; அவர்கள் பிராமண சமுதாயத்தின் கொடூர முகத்தைக் கண்டு மனம் வெதும்பிப் புறப்பட்ட பாரதியின் வழிவந்தவர்கள்..!  


ஏன் “சோ” எழுதிய “எங்கே பிராமணன்” தொடரைப் படிக்கவில்லையா..? மேல்நாட்டு பணத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாகப் பங்கிட்டுக் கொள்வது “பிரா”மணர்களே..! ஆம்,”ஆடு பகை குட்டி உறவு” என்பது போல நயந்து உறவாடி மொழியைக் கற்று அங்கும் ஆட்சி செய்வது “இவா”தானே..? “தமிழை”க் கொன்று தமிழ் கலாச்சாரத்தைக் கொன்று மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு 100 கோடி இந்தியர்களை அடிமைகளாக்கியது இந்து பிராமண வியாபாரிகளே..! மொழியிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் வரை இறக்குமதி செய்து இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் இந்து பிராமண வியாபாரிகள் இந்தியாவின் கடைக்கோடியிலிருக்கும் வேளைக்கு உணவில்லாத ஏழைக்கு என்ன தரமுடியும்..?  


“பூஜ்ய ஸ்ரீ” என்பதன் சொற்பொருள் யோசிக்காமல் சிறுபிள்ளைத் தனமாக புலம்புகிறீர்கள்; “ஸ்ரீ” என்பது ஆங்கிலத்தில் “மிஸ்டர்” என்றும் தமிழில் “திருமிகு” என்றும் வழங்கப்படும் சொல்லுக்கு இணையான சொல்லாகும்; “பூஜ்ய” எனும் சொல்லுக்கு விளக்கம் தேவையில்லை; அது வெறுமையைக் குறிக்கும் சொல்லாகும்; எனவே குறிப்பிட்ட நபர் தன் சுய நலத்தைனை விட்டு தன்னை வெறுமையாக்கி அல்லது கடவுளைச் சரணடைந்தவர் என்று கொள்ளலாம்; மேலும் “பூஜ்ய ஸ்ரீ” எனும் சொல் ஒரு மதத்துக்குச் சொந்தமானது அல்ல; அது சமஸ்கிருத மொழி வார்த்தை; தமிழிலும் மற்ற மொழிகளிலும் எத்தனையோ மாற்று மொழி வார்த்தைகள் கலந்திருக்கிறது; 


பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (மதம் மாற்ற..?) பயன்படுத்தும் மொழி என்பதால் ஆங்கிலத்தை யாரும் பயன்படுத்துவதில்லையா..?  
இதற்கு தான், “ஆடு பகை குட்டி உறவா..?” என்பார்கள்; 


தேவைப்பட்டால் இன்னும் தொடரும்..!










Free Web Counters


HTML Hit Counters

14 comments:

Anonymous said...

Dear Brother,
Nice to see your site. There are many comments that I have posted has been rejected by the tamilhindu editors. I also like to contribute in your site. If you are willing please contact me at ashokkumar_ganesan@yahoo.com

Valluvan said...

Tamilhindu editors have approved comments written by Christians, Muslims and Periyar-dasars. So it is a blatant lie to say that your comments were not approved!

christianbrahmin said...

நண்பர் வள்ளுவன் அவர்களே,மேற்கண்ட பின்னூட்டமானது உங்கள் "தமிழ் ஹிந்து" தளத்தில் பதிக்கப்படாத காரணத்தாலேயே இங்கு பதித்துள்ளேன் என்பதனை அறியவேண்டுகிறேன்;

மேலும் கிறிஸ்தவ பிராமணர்களை அங்கீகரிக்க மறுத்து தூஷிக்கும் ஒவ்வொருவரும் வெட்கப்படும் காலம் வரத்தான் போகிறது;

பிராமணனாக இருந்ததைக் காட்டிலும் கண் தெளிவிக்கப்பட்ட நிலையில் இரு தரப்பையும் ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு தற்போது கிட்டியிருப்பதால் சுயமாக சிந்திக்கவும் எந்த முடிவையும் எடுக்கும் தெளிவான மனநிலையில் இருப்பதால் யாரும் மயக்கி மதம் மாற்றிவிட்டனர் என்பது அறியாமையாகும்;

பிராமணன் பிறப்பால்,பழக்கவழக்கத்தால் மண்ணுக்குப் போகும் வரை பிராமணன் தான்;

"கிறிஸ்தவ பிராமணன்" என்ற சுதந்தர சிந்தனைக்கு எதிரான கருத்தினை ஏனைய பிராமணர்கள் மாற்றிக் கொள்ளும்வரை போராடுவோம்.

christianbrahmin said...

இதோ இது எனது தள்ளப்பட்ட கடைசி விமர்சனம்..!

glady
26 October 2009 at 9:11 am
நரிகள் ஏற்கனவே இங்கே இருந்தன; ஆனால் மிஷன் அங்கிருந்து வருமுன்னரே கலாச்சாரம் வருமுன்னரே (அதாவது பேண்ட் முதலாக ப்ரெட்,கேக் வரை..) நவீன இந்தியாவை நிர்மாணிக்கும் உயர்திட்டத்துடன் வாணிப நோக்கில் இங்கே வந்த பிரிட்டிஷார் ரயில்வே டிராக் முதலாக அத்தனை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தினர்; இதனை வைத்து இன்றைக்கு இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொண்டு இருப்பது இந்தியரல்ல; இன்னும் இங்கே இருக்கும் ஆதிக்க ஆக்கிரமிப்பு சக்திகள்..!
வெள்ளையன் போனாலும் கொள்ளையன் போகவில்லை;
இந்திய அரசு நிறுவனங்களிலேயே தனி பட்ஜெட் போடுமளவுக்கு ஆசியாவிலேயே பெரிய நிறுவனமாக லாபகரமாக இயங்கும் இரயில்வே துறையின் வெற்றிகளுக்காக நாமனைவரும் பிரிட்டிஷாருக்கு நன்றியாக இருந்தாக வேண்டும்; அவர்கள் போட்ட “டிராக்”கில் தான் இன்னும் வண்டி ஓடுகிறது; அந்த “டிராக்”கை இங்கே இருப்போர் திருடாமலிருந்தாலே போதுமானது.

dhanabal said...

gladdy அய்யா,
சமீபத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த மலைப் பாங்கான இடத்தில் இதுவரை கண்டறியப் படாத ஒரு மலை வாழ் இனம் ஒன்றை கண்டறிந்தார்கள்.இது வரை அவர்கள் வெளி உலகத் தொடர்பை அறியாதவர்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் அய்யா .அதை நீங்கள் தான் bible ன் துணை கொண்டு விளக்க வேண்டும்.
இந்த மலை வாழ் இனம் உங்கள் ஏசு வைப் பற்றி அறியாதவர்கள்.இங்கு இறக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தை எங்கு செல்லும்.மீளா நரகத்துக்கா? இல்லை சொர்கத்திர்க்கா?

Anonymous said...

Dear Glady, Please read the statement of Mecaulay in British Parliment during 1835CE. Do you know that Thomas Monroe, the first Governor of British regime in India, documented evidence proves that India was having 20% market share in World Trade during early 19th century. We had such a wast treasure and all the foreign invaders including the British came and looted.

ThirumadhuVazh Marban said...

I am not opposing you or approving you. Have you ever heard about SriVaishnavism. Where did you saw the ills & difficulties done by brahmins in the name of castes?. Why are you branding yourselves as Christian Brahmin? Does brahmins have 100 heads or 1000 hands or any superior power than others? Why you are attaching a caste name that belongs to Sanathana Dharmam?. Have you ever heard about D.A.Joseph, a pondichery citizen who was once a christian and did research about SriVaishnavism. Now he completely changed as a true Srivaishnavite. I am not asking you to convert to SriVaishnavism. By adding you SriVaishnavism never gets pride or but leaving you no cause. Go to www.dajoseph.com. First listen the sample talks available there. Then if you have time, go and read the articles. Hope you will. Ready to discuss with u, if ur interested. Contact me @ smartcool85@gmail.com

Thirumadhuvazh marban said...

I am not opposing you or approving you. Have you ever heard about SriVaishnavism. Where did you saw the ills & difficulties done by brahmins in the name of castes?. Why are you branding yourselves as Christian Brahmin? Does brahmins have 100 heads or 1000 hands or any superior power than others? Why you are attaching a caste name that belongs to Sanathana Dharmam?. Have you ever heard about D.A.Joseph, a pondichery citizen who was once a christian and did research about SriVaishnavism. Now he completely changed as a true Srivaishnavite. I am not asking you to convert to SriVaishnavism. By adding you SriVaishnavism never gets pride or but leaving you no cause. Go to www.dajoseph.com. First listen the sample talks available there. Then if you have time, go and read the articles. Hope you will. Ready to discuss with u, if ur interested. Contact me @ smartcool85@gmail.com

Thirumadu Vazh Marban said...

what u had find newly in christianity?. For money,material and other dirty things you people are fallen in the magical net. you need indian culture,indian tradition,ponds and lakes built by indian hindus,knowledge taught by Hindu scriptures. But you are opposing Sanathana Dharma and its practices. Your brain(s) is(are) washed by ugly water and you are hiding yourself in the magical evangelical blanket. What is not there in our ancient wonderful culture and tradition? Why are you blaming a community or a religious group for your upheld and growth? Have you ever heard about the Car Festival,Flag Hoisting,Throwing Fruits in the Cars of deities,Wearing Mangala Sutra in the form of Cross other than Indian Continent. Ask your pope for the meaning of these things and practices? Are your forefathers and grandmother, great grand mother are unwise. Don't they have good mind and knowledge. I don't think so. They are wise having adequate knowledge and strong belief and brave. They followed a wonderful culture and century old good practices. But you just for money and material changing yourself and travelling a wrong path. Think Wise !!! Act Wise !!! Don't Blame and say Lame excuses for your disrupt in growth!! :)

christianbrahmin said...

glady (Not Posted)
28 October 2009 at 10:45 am
வள்ளுவன்
23 October 2009 at 8:43 pm

திரு.ஜோசப் டேனியல் அவர்களே,
//… ஆனால், நமது தாய்நாடு இந்திய அமெரிகாவைப்போளவோ, இங்கிலாந்தைப்போலவோ, பிரான்சைப்போலவோ, ஜெர்மனியைப்போலவோ வளராததர்க்குக் காரணம் இந்தியாவை இந்துநாடு இன்று கூறாமல், ‘மதசார்பற்ற நாடு’ என்று கூறியதனால் என்று நான் சொல்கிறேன், இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?? //

“சனாதனி”யின் உட்பொருளே “மதச் சார்பற்றவன்” என்பது தான்..!
இதனாலேயே கிறிஸ்தவன் அல்லது இஸ்லாமியன் ஒரு இந்துவையும் அவன் நம்பும் தெய்வங்களையும் நிந்தனை செய்தாலும் சனாதன தர்மத்தைக் கைக் கொள்ளும் இந்து (பிராமணன்..?) மாற்று மார்க்க நம்பிக்கையாளரை நிந்திக்க மாட்டான் அல்லது நிந்திப்பவன் “சனாதனி” அல்ல;

உதாரணத்துக்கு எல்லோருடைய ஆதரவையும் வேண்டி நிற்கும் எஜமானன் இல்லாத “பைரவர்” எல்லோருக்கும் மரியாதை செய்வார்,வாலாட்டி; ஆனால் ஒரே எஜமானனிடம் சிக்கிக் கொள்ளும் “பைரவரோ” தன் எஜமானனைக் குஷிப் பண்ண வேண்டா வெறுப்பாகவேனும் எல்லார்மேலும் சீறுவார்..!

dhanabal. said...

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.ஏசுவைப் பற்றி அறியாத ஒரு மலை வாழ் இனத்தில் இறக்கும் ஒரு குழந்தை எங்கே செல்லும்?ஏசு வின் உலகத்திர்க்கா?மீளா நரகத்திற்கா?

christianbrahmin said...

அன்பரே,"ஜகத்குரு"வான இயேசுகிறிஸ்து மரணத்தையும் நரகத்தையும் குறித்துப் பேசிய தருணங்களைக் காட்டிலும் ஜீவனையும் விண்ணக வாழ்வையும் குறித்துப் பேசிய தருணங்கள் அதிகமாகும்;

எனவே உங்களுக்கு எனது நேரடியான பதில்,"சிறுபிள்ளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்,தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்ற இயேசு பெருமானின் வாக்கியமே;

இதன்படி அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பில்லை; ஆனாலும்..?

Thirumadhu Vazh Marvan said...

what happened Mr.Glady. No response still to my comments.

christianbrahmin said...

Thirumadhu Vazh Marvan
அவர்களுக்கு வாழ்த்துக்கள்; நீங்கள் சொல்லவரும் காரியத்தின் சூட்சமம் புரியவில்லை; மீண்டும் மீண்டும் பணத்தைக் குறித்து நீங்கள் குறிப்பிடுவது உங்கள் பெலவீனத்தையே காட்டுகிறது;

நீங்கள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் என்னை வந்து பாருங்கள்; நான் பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்; எனது தாயார் மதம் மாறியதால் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர்; இதனால் எங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் இழந்தோம்; இப்போதும் உழைத்துதான் சாப்பிடுகிறேன்;

நான் மதம் மாறியவுடனே இந்திய பாரம்பரியங்களுக்கு அந்நியமாகி விட்டதாக எப்படி சொல்லலாம்..?

உண்மையில் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மொத்த இந்தியாவுமே விலை போய்க் கொண்டிருக்கிறது; அதையறியாமல் மதமாற்றத்தால் மட்டுமே எல்லாம் கெட்டுப்போனதைப் போன்ற எண்ணம் பரவிவிட்டது;

கிறிஸ்தவம் உண்மையில் கீழ்த்திசை மார்க்கம்; தவம்,தியாகம் மற்றும் ஆச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது; நாம் அதனை தள்ளிவிட்டதாலேயே தவறானவர்கள் கையில் சிக்கி அது சின்னா பின்னமானது;

Post a Comment