Friday, November 13, 2009

வந்தேமாதரம் ..!

B.R.ஹரன்
//
நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் 

செய்துள்ளார். //





திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;


சந்தியா ஜெயின்:
//
தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.//



சரி,இந்த கட்டுரையின் ஆசிரியர் அதனை வழிமொழிகிறாரா?
ரொம்ப சந்தோஷம்,பாரதத் தாயை நீங்களே கூறுபோட்டு விற்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே..!



அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
சற்று விவரம் கேட்கவேண்டும்..!



இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?


சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!


ஒரு திரைப்படத்தில் ஆச்சிமனோரமா என்று நினைக்கிறேன்வந்தே மாதரம் என்பதை வந்தேமாத்ரோம்அதாவது வந்து ஏமாத்துறோம் என்பார்கள்,பரியாசமாக; இன்றைக்கும் அதுதான் நடக்கிறது;


கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்கவே வெள்ளைக்காரன் வந்தானோ எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்ஒற்றை இலக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உண்மையான தியாகிகள்; சுதந்தரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளோ மனம் வெதும்பிய நிலையிலிருக்கின்றனர்; அவர்களுக்காக ஒரு துரும்பும் கிள்ளிப் போட மனமில்லாத நான் பாரத் மாதா கீ ஜேஎன முழங்கி ஆகப் போவதென்னவோ?


ரொம்ப ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால் எங்கே அந்நியன் வந்து ஆக்கிரமித்து விடுவானோ என பயந்து போய் கிடக்கிறேன்…!


சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் வந்தே மாதரம்பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?


சந்தியா வந்தனம்செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டேஎன்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!

No comments:

Post a Comment