Showing posts with label culture. Show all posts
Showing posts with label culture. Show all posts

Thursday, October 21, 2010

சாமியின் சேலையை அவிழ்க்கும் பூஜாரிகள்..!

// பிற மதத்தவரின் தெய்வங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை. பிற மத தெய்வங்களை இகழத் துடிக்கிறீர்கள் //


அண்ணா, தாங்கள் குறிப்பிட்ட கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது ;தெய்வம் என்பவர் தமது சிருஷ்டியைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர்; அந்த நிலையிலிருந்து அவர் தமது தன்மையை மனிதனுக்கு தமது சிருஷ்டிகள் மூலம் விளக்குகிறார் .

ஆனால் மனிதர்களே தெய்வத்தின் தன்மையைக் குறித்த தவறான அபிப்ராயத்தினால் அவரை கீழ்த்தரமாக சித்தரிக்கிறார்கள் என்பதே எனது வேதனை.

நேற்று கூட ஒரு நண்பர் மாதாவின் சிலைக்கு மாலை 7 மணிக்கு அனைவர் கண் முன்பும் சேலை கட்டிவிடுகிறார்; இது என்ன பயங்கரம் , ஒரு இந்து பூஜாரி கூட இதுபோல செய்யத் துணியமாட்டாரே..!

அங்கு என்ன நடக்கிறது ,சாமி சிலைக்கு முன்பகுதியில் ஒரு திரைச்சீலை இருக்கும் ; அதன் மறைவில் சென்றே (பக்தைக்கும் சேர்த்து..? ) சேலை கட்டுவார் , பூஜாரி.

சரி ,தற்கால வாழ்க்கையின் நடைமுறையில் யார் யாருக்கு சேலை கட்டுவார் , அவிழ்ப்பார் ,மாற்றுவார் என்று சிந்திப்போமா?

ஒரு கணவன் மாத்திரமே காதலுக்காகிலும் மனைவியின் சுகவீனத்தின்போதும் இதனைச் செய்வார்; அல்லது ஒரு மகன் வயதான தாய்க்கு அவள் கைகால் தளர்ந்தோ படுக்கையிலோ இருக்கும் போது சேலை கட்டிவிடுவா
ன் ; பொதுவாக சேலை கட்டும் (ஆடையணியும் ) நோக்கமே நிர்வாணத்தை மறைக்கவே .

எல்லாம் படைத்த சாமிக்கு ஏது நிர்வாணம் ,மனிதனுக்கு ஆடையணிவித்த சர்வ வல்லவர் அவர் தனக்கேற்ற உடையை அணிந்திருக்கமாட்டாரா?

ஒரு பெண் ஒருபோதும் வேறொரு ஆடவனிடம் சேலைக் கட்டிக்கொள்ளவே மாட்டா
ள் ;அல்லது பெண்கள் பருவமெய்திய இளங்குமரத்திகளுக்கு சேலை கட்டுவதுமுண்டு .

அப்படியானால் பராசக்தி என்று உயர்த்தி வைத்து ஆராதிக்கப்படும் ஒரு
பெண் தெய்வம் எந்த அடிப்படையில் ஒரு ஆடவன் தன் சேலையை மாற்ற அனுமதிக்கிறது ?

ஒவ்வொரு பக்தனும் இதனை யோசிக்கவேண்டும்.

Saturday, August 14, 2010

படிக் கோலம்

படிக் கோலம்

அண்மையில் ஒரு கட்டுரைக்காக சில படங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது கீழ்க்கண்ட படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் என்னைக் கவர என் அன்னையைக் கேட்டேன்; 



எருசலேமின் சந்தைவெளி -அலங்கார விரிப்பு


இந்த  சதுரங்க அமைப்புள்ள டிசைன்கள் சதுர வடிவான எருசலேம் நகரின் பாதுகாப்பு சம்பந்தமான குறியீடுகளாம்; அது எனது வீட்டில் போடப்படும் கோல டிசைன்களை நினைவுபடுத்த எனது அன்னையிடம் விளக்கம் கேட்கவும் அவள் சில மாதிரிகளை வரைந்து காட்டி இதைப் படிக்கோலம் என்போம்; 
 



படிக் கோலம்

வளைவு நெளிவுகளோ புள்ளிளை இல்லாமல் கோடுகளாலேயே அமைக்கப்பட்டது;இது விசேஷ தினங்களில் பிராமணர்கள் மட்டுமே போடுவது;இதற்கான மாவை மெல்லியதாக மிகுந்த சிரமத்துடன்  முந்திய நாளே ஆயத்தம் செய்யவேண்டும்;அடுத்து அதில் தூய்மையானதொரு துணியைத் தோய்த்து அதன்மூலம் இதனை இடவேண்டும் என்றாள்;

இன்றுவரை நமது கலாச்சாரத்துடன் ஒன்றித்துவிட்ட கோலங்கள் சொல்லும் சேதி என்ன,என்பதை என் மனம் ஆராய்ச்சி செய்தது;

யூதருடைய விருப்பமான வர்ண கோலங்களும் கைவண்ணங்களும் அவர்களுடன் நமக்கிருக்கும் கலாச்சாரரீதியான தொடர்பைக் குறித்து ஆய்ந்த‌றியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது;

இதைக் குறித்த ஆய்வுக் குறிப்புகள் நண்பர்களிடம் இருப்பின் இங்கே பதிக்கவும்.