Tuesday, October 12, 2010

" ப்ரஜாபதி" யார்..?

October 8, 2010 12:02 AM
தனபால் said...

// இந்தப் ப்ரஜாபதி என்பவர் யார்??? இயேசு கிறிஸ்துவா? கர்த்தரா? கூறுங்கள். இந்தப் ப்ரஜாபதிக்கு மனைவிகள், மற்றும் பல குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா??? முதலில் இந்தப் பிரஜாபதி பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கூறுங்கள். பிறகு விவாதிக்கலாம். //

சிவனின் மூத்த மகன்;;; கணங்களுக்கெல்லாம் தலைவன்;; அதனால் கணபதி;; இவரின் பிறப்பை பற்றி பல கதைகள் உண்டு;;

1. பார்வதியும் சிவனும் யானைகளாக மாறி விளையாடும்போது, பார்வதி கருவுற்று, பிறகு பிறந்தவன் கணபதி.(உத்ர ராம).

2. ஒரு முறை பார்வதி சனிகோளை கணபதிக்கு காட்ட, அதன் சக்தியால் இவன் தலையை இழக்க, ஒரு யானையின் தலையை வைத்தனர்;;

3.பார்வதி குளிக்கும் போது, கணபதி காவலிருக்க, அச்சமயம் சிவன் வர, அவன் தடுக்க, அதில் மூணட போரில் கணபதியின் தலையை சிவன் துண்டிக்க, பிறகு அவரே வருந்தி ஒரு யானையின் தலையை வைத்தார்.(பத்ம புரா).

கைலாயத்தில் பரசுராமர் வர, அச்சமயம், சிவன் உறங்கி கொண்டிருக்க, கணப்தி அவரை தடுக்க, அவர் கணபதியின் தந்தங்களை உடைத்தார்.(பத்ம புரா);;

தென்னிந்தியாவில் வறட்சி நிலவ, அகஸ்தியர் அதை சிவனிடம் கூற, அவர் அச்சமயம் தொழ வந்த காவிரியை அகஸ்தியரின் கமண்டலத்தில் போட, பிறகு அகஸ்தியர் தவம் செய்யும் போது கணபதி  காகம் வடிவில் வந்து , கமண்டலத்தை உருட்ட, காவிரி பெருகி ஓடியது;;

கண்பதிக்கும், சுப்ரஹ்மண்யனுக்கும் திருமண ஆசை வர, சிவன் பார்வதி இருவரும் அவர்களிடத்தில் "யார் உலகம் முழுமையையும் சுற்றி முதலில் வருகிறானோ அவனுக்கே திருமணம்" என்றனர்.

கந்தன் மயிலில் ஏறி சுற்றி வர, கணபதி  தன் பெற்றொர்களை வலம் வந்து , " இந்த அண்டசராசரமே உங்களுள் உள்ளது. ஆகையால் உங்களை சுற்றினால் போதும் " என்றான். அவர்கள் மகிழ்ந்து அவருக்கு சித்தி, புத்தி என்ற இரு பெண்களை மணமுடித்தனர். நமக்கு தெரிந்த கதையில் மாம்பழத்திற்காக நடந்ததே தெரியும்;;

இந்திரன், தேவர்களின் படைத் தலைவனாக கந்தனை ஏற்று, விழா நடத்தும்போது அவனின் கைகள் மரத்துப் போயின;; அவன் தவிக்க, சிவன் எல்லா காரியத்திற்க்கும் முதலில் விக்னங்களை தீர்க்கும் விநாயகனை, தொழுது செய்யவேண்டும்; இந்திரன் அவ்வாறே செய்ய, அவன் கைகள் பலம் பெற்றன;;

வ்யாசர் பாரதம் எழுத நினைக்க, அவர் ப்ரம்மாவிடம் தனக்கு ஒரு ஆள் எழுத வேண்டும் என வேண்ட, அவர் கணபதியை அனுப்பினார். கணபதி  வ்யாசரிடம் " எழுதுகிறேன், ஆனால் நிறுத்தாமல் சொல்லவேண்டும். நிறுத்தி விட்டால் எழுத மாட்டேன்" என்றார். அதற்கு வ்யாசர் "பொருள் தெரிந்து எழுதிக் கொண்டே வந்தால் நான் தயார்" என்றார். இவ்வாறு பாரதம் எழுதப்பட்டது;;

ஆதி சங்கரர் கணபதியை தொழும் மதத்திற்கு "காணபத்யம்" என பெயரிட்டார். மற்ற விவரங்களுக்கு கணேச புராணம் பார்க்கவும்.

-இது "கணபதி" என்ற ஒரு சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்தில் பெற்ற பதிலாகும்;இது அனைத்தும் உண்மை என்றோ இதில் ஏதோ ஒன்று உண்மை என்றோ கூறினால் எதை உண்மை என்று கொள்ளமுடியும்?

அப்படியானால் ஏன் அந்த உண்மையற்ற பொருளை வணங்குகிறோம்?

சமுதாய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அறிவுக் கண்ணைக் குருடாக்கிக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறோம்;

இந்த அறிவுக் கண்ணைத் திறக்கவே இயேசுவானவர் தமது அடியவரை அனுப்புகிறார்;
தற்காலத்தில் மிகப் பிரபலமாக வணங்கப்படும் கணபதிக்கே இத்தனை விளக்கங்கள் என்றால் விளக்கம் சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்களும் மொழியியலாளர்களும் வேத சுலோகங்களுக்கு  சரியான பொருளை தேவபக்தியுடன் சொல்லகூடிய உண்மையாளர்களும் மறைந்துபோன ஒரு வேதத்துக்கு யார் சரியான பொருளை சொல்லிவிடமுடியும்?

"ப்ரஜாபதி" எனும் குறிப்பிட்ட சொல்லின் அர்த்தமும் அந்த ப்ரஜாபதியின் குறிப்பிட்ட குணாதிசயங்களும் அதாவது பலியாக வேதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ப்ரஜாபதியின் 9(நபர்களல்ல‌) தன்மைகளும் இயேசு ஒருவருக்கே பொருந்துவதால் சாது செல்லப்பா போன்ற வேத விற்பன்னர்கள் அதனை எடுத்து கூறினார்கள்;

மற்றபடி என்னைப் போன்றோர் ப்ரஜாபதியில் இயேசுவைக் காணவில்லை; அரைகுறையாக இங்கே சொல்லப்பட்ட புனையப்பட்ட "ப்ரஜாபதி"யின் சில குணாதிசயங்களை இயேசுவில் காண்கிறோம்,அவ்வளவே;

நான் என் பாட்டியைப் போல இருப்பதாகக் கூறுவதற்கும் என் பாட்டி என்னைப் போல இருப்பதாகக் கூறுவதற்குமுள்ள வித்தியாசமே இதிலும் உண்டு; யாரை வேண்டுமானாலும் இயேசுவுடன் ஒப்பிடலாம்,தள்ளிவிடலாம்;
யாருடனும் இயேசுவை ஒப்பிட இயலாது;அவர் சத்தியமானவர்,ஈடிணையில்லாதவர்.

'ப்ரஜாபதி' என்று யாரும் கிடையாது;ஆனால்
இயேசுவானவர் வரலாற்று புருஷர்;

'ப்ரஜாபதி' மனுக்குலத்தின் ஏக்கம்;ஆனால்
இயேசுவானவர் நிறைவேறிய இறைவாக்கு;

'ப்ரஜாபதி' யாரோ எனக்கு கவலையில்லை;ஆனால்
இயேசுவானவர் யார் என்பது எனக்குத் தெரியும்.

'ப்ரஜாபதி'யின் கதையை மெய்ப்பிக்க இயலாது;
இயேசுவானவரின் தியாகத்தை பொய்யாக்க இயலாது;

இன்னும் ஒவ்வொரு இந்து தெய்வத்தின் பெயரிலும் (கணபதி,விநாயகர்,முருகன்,பிள்ளையார்,தாயுமானவர்,நாராயணன்,வேங்கடாஜலபதி....) இயேசுவின் செயல் இருக்கிறது என்று நான் தியானித்து அது இயேசுவில் மட்டுமே நிறைவேறியது என்று கூறினால் அப்படியானால் இவர் தான் அவரா என்பதோ அவர்தான் இவரா என்பதும் மதியீனமாகும்,குழப்பிக் கொள்ளக்கூடாது.


http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post.html

No comments:

Post a Comment