Showing posts with label bible. Show all posts
Showing posts with label bible. Show all posts

Thursday, October 21, 2010

உலகம் அழியுமா?


// உங்களுடைய இருக்கிற தெய்வத்தை வைத்து, சந்திரனையும், சூரியனையும் இயக்குகிற தெய்வத்தை வைத்து, தொடர்ச்சியாக சந்திரன் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி, மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக் இப்படி ஒளி விடும்வடி செய்து காட்டுங்கள் //

அண்ணா,நீங்க கேட்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;ஒரே சிரிப்பாக வருகிறது;உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இறைவன் முடிவுசெய்துவிட்டால் அதனைப் பார்த்து இறைவனை ஏற்றுக்கொள்ள இந்த உலகில் எந்த உயிரினமும் இருக்காது;ஏன் இந்த உலகமே இருக்காது ; அறிவுபூர்வமான கேள்வியைத் தான் கேட்கிறீர்களா?

அந்த நாளும் விரைவில் வருகிறது , இதுவரை தமது சிருஷ்டிகள் மூலம் மனிதனுடன் போராடிக் கொண்டிருந்த இறைவன் தமது அனைத்து இரக்கத்தையும் அடைத்துக் கொண்டு இந்த கீழ்ப்படியாத உலகை நியாயந்தீர்க்க இறங்கும் நாளில் தங்கள் வேண்டுகோள் அற்புதமாக நிறைவேறப்போகிறது; அது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட இன்னும் பயங்கரமாக இருக்கும் .

இது பழைய ஏற்பாட்டின் "யோவேல்" எனும் புத்தகத்திலிருந்து...

Joe 2:30  வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
 
Joe 2:31  கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
 
Joe 2:32  அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

இது பழைய ஏற்பாட்டின் "செப்பனியா "எனும்  புத்தகத்திலிருந்து...
 
Zep 1:1  ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
 
Zep 1:2  தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:3  மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:4  நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
 
Zep 1:5  வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
 
Zep 1:6  கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
 
Zep 1:7  கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
 
Zep 1:8  கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
 
Zep 1:9  வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
 
Zep 1:10  அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:11  மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.
 
Zep 1:12  அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
 
Zep 1:13  அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
 
Zep 1:14  கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.
 
Zep 1:15  அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
 
Zep 1:16  அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
 
Zep 1:17  மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.
 
Zep 1:18  கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார் .

Tuesday, October 12, 2010

" ப்ரஜாபதி" யார்..?

October 8, 2010 12:02 AM
தனபால் said...

// இந்தப் ப்ரஜாபதி என்பவர் யார்??? இயேசு கிறிஸ்துவா? கர்த்தரா? கூறுங்கள். இந்தப் ப்ரஜாபதிக்கு மனைவிகள், மற்றும் பல குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா??? முதலில் இந்தப் பிரஜாபதி பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கூறுங்கள். பிறகு விவாதிக்கலாம். //

சிவனின் மூத்த மகன்;;; கணங்களுக்கெல்லாம் தலைவன்;; அதனால் கணபதி;; இவரின் பிறப்பை பற்றி பல கதைகள் உண்டு;;

1. பார்வதியும் சிவனும் யானைகளாக மாறி விளையாடும்போது, பார்வதி கருவுற்று, பிறகு பிறந்தவன் கணபதி.(உத்ர ராம).

2. ஒரு முறை பார்வதி சனிகோளை கணபதிக்கு காட்ட, அதன் சக்தியால் இவன் தலையை இழக்க, ஒரு யானையின் தலையை வைத்தனர்;;

3.பார்வதி குளிக்கும் போது, கணபதி காவலிருக்க, அச்சமயம் சிவன் வர, அவன் தடுக்க, அதில் மூணட போரில் கணபதியின் தலையை சிவன் துண்டிக்க, பிறகு அவரே வருந்தி ஒரு யானையின் தலையை வைத்தார்.(பத்ம புரா).

கைலாயத்தில் பரசுராமர் வர, அச்சமயம், சிவன் உறங்கி கொண்டிருக்க, கணப்தி அவரை தடுக்க, அவர் கணபதியின் தந்தங்களை உடைத்தார்.(பத்ம புரா);;

தென்னிந்தியாவில் வறட்சி நிலவ, அகஸ்தியர் அதை சிவனிடம் கூற, அவர் அச்சமயம் தொழ வந்த காவிரியை அகஸ்தியரின் கமண்டலத்தில் போட, பிறகு அகஸ்தியர் தவம் செய்யும் போது கணபதி  காகம் வடிவில் வந்து , கமண்டலத்தை உருட்ட, காவிரி பெருகி ஓடியது;;

கண்பதிக்கும், சுப்ரஹ்மண்யனுக்கும் திருமண ஆசை வர, சிவன் பார்வதி இருவரும் அவர்களிடத்தில் "யார் உலகம் முழுமையையும் சுற்றி முதலில் வருகிறானோ அவனுக்கே திருமணம்" என்றனர்.

கந்தன் மயிலில் ஏறி சுற்றி வர, கணபதி  தன் பெற்றொர்களை வலம் வந்து , " இந்த அண்டசராசரமே உங்களுள் உள்ளது. ஆகையால் உங்களை சுற்றினால் போதும் " என்றான். அவர்கள் மகிழ்ந்து அவருக்கு சித்தி, புத்தி என்ற இரு பெண்களை மணமுடித்தனர். நமக்கு தெரிந்த கதையில் மாம்பழத்திற்காக நடந்ததே தெரியும்;;

இந்திரன், தேவர்களின் படைத் தலைவனாக கந்தனை ஏற்று, விழா நடத்தும்போது அவனின் கைகள் மரத்துப் போயின;; அவன் தவிக்க, சிவன் எல்லா காரியத்திற்க்கும் முதலில் விக்னங்களை தீர்க்கும் விநாயகனை, தொழுது செய்யவேண்டும்; இந்திரன் அவ்வாறே செய்ய, அவன் கைகள் பலம் பெற்றன;;

வ்யாசர் பாரதம் எழுத நினைக்க, அவர் ப்ரம்மாவிடம் தனக்கு ஒரு ஆள் எழுத வேண்டும் என வேண்ட, அவர் கணபதியை அனுப்பினார். கணபதி  வ்யாசரிடம் " எழுதுகிறேன், ஆனால் நிறுத்தாமல் சொல்லவேண்டும். நிறுத்தி விட்டால் எழுத மாட்டேன்" என்றார். அதற்கு வ்யாசர் "பொருள் தெரிந்து எழுதிக் கொண்டே வந்தால் நான் தயார்" என்றார். இவ்வாறு பாரதம் எழுதப்பட்டது;;

ஆதி சங்கரர் கணபதியை தொழும் மதத்திற்கு "காணபத்யம்" என பெயரிட்டார். மற்ற விவரங்களுக்கு கணேச புராணம் பார்க்கவும்.

-இது "கணபதி" என்ற ஒரு சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்தில் பெற்ற பதிலாகும்;இது அனைத்தும் உண்மை என்றோ இதில் ஏதோ ஒன்று உண்மை என்றோ கூறினால் எதை உண்மை என்று கொள்ளமுடியும்?

அப்படியானால் ஏன் அந்த உண்மையற்ற பொருளை வணங்குகிறோம்?

சமுதாய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அறிவுக் கண்ணைக் குருடாக்கிக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறோம்;

இந்த அறிவுக் கண்ணைத் திறக்கவே இயேசுவானவர் தமது அடியவரை அனுப்புகிறார்;
தற்காலத்தில் மிகப் பிரபலமாக வணங்கப்படும் கணபதிக்கே இத்தனை விளக்கங்கள் என்றால் விளக்கம் சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்களும் மொழியியலாளர்களும் வேத சுலோகங்களுக்கு  சரியான பொருளை தேவபக்தியுடன் சொல்லகூடிய உண்மையாளர்களும் மறைந்துபோன ஒரு வேதத்துக்கு யார் சரியான பொருளை சொல்லிவிடமுடியும்?

"ப்ரஜாபதி" எனும் குறிப்பிட்ட சொல்லின் அர்த்தமும் அந்த ப்ரஜாபதியின் குறிப்பிட்ட குணாதிசயங்களும் அதாவது பலியாக வேதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ப்ரஜாபதியின் 9(நபர்களல்ல‌) தன்மைகளும் இயேசு ஒருவருக்கே பொருந்துவதால் சாது செல்லப்பா போன்ற வேத விற்பன்னர்கள் அதனை எடுத்து கூறினார்கள்;

மற்றபடி என்னைப் போன்றோர் ப்ரஜாபதியில் இயேசுவைக் காணவில்லை; அரைகுறையாக இங்கே சொல்லப்பட்ட புனையப்பட்ட "ப்ரஜாபதி"யின் சில குணாதிசயங்களை இயேசுவில் காண்கிறோம்,அவ்வளவே;

நான் என் பாட்டியைப் போல இருப்பதாகக் கூறுவதற்கும் என் பாட்டி என்னைப் போல இருப்பதாகக் கூறுவதற்குமுள்ள வித்தியாசமே இதிலும் உண்டு; யாரை வேண்டுமானாலும் இயேசுவுடன் ஒப்பிடலாம்,தள்ளிவிடலாம்;
யாருடனும் இயேசுவை ஒப்பிட இயலாது;அவர் சத்தியமானவர்,ஈடிணையில்லாதவர்.

'ப்ரஜாபதி' என்று யாரும் கிடையாது;ஆனால்
இயேசுவானவர் வரலாற்று புருஷர்;

'ப்ரஜாபதி' மனுக்குலத்தின் ஏக்கம்;ஆனால்
இயேசுவானவர் நிறைவேறிய இறைவாக்கு;

'ப்ரஜாபதி' யாரோ எனக்கு கவலையில்லை;ஆனால்
இயேசுவானவர் யார் என்பது எனக்குத் தெரியும்.

'ப்ரஜாபதி'யின் கதையை மெய்ப்பிக்க இயலாது;
இயேசுவானவரின் தியாகத்தை பொய்யாக்க இயலாது;

இன்னும் ஒவ்வொரு இந்து தெய்வத்தின் பெயரிலும் (கணபதி,விநாயகர்,முருகன்,பிள்ளையார்,தாயுமானவர்,நாராயணன்,வேங்கடாஜலபதி....) இயேசுவின் செயல் இருக்கிறது என்று நான் தியானித்து அது இயேசுவில் மட்டுமே நிறைவேறியது என்று கூறினால் அப்படியானால் இவர் தான் அவரா என்பதோ அவர்தான் இவரா என்பதும் மதியீனமாகும்,குழப்பிக் கொள்ளக்கூடாது.


http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post.html